Don Box Office: டான் திரைப்படம் 100 கோடி வசூல்..? அஜித், விஜய் வரிசையில் இணையும் சிவகார்த்திகேயன்...

First Published May 18, 2022, 12:53 PM IST

Don Box Office Collection: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த டான் திரைப்படம், ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.

don

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள படம் டான், இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். நடிகர் எஸ்கே கல்லூரி மாணவனாக நடித்துள்ள இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். 

don

சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரடக்‌ஷன்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்த இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 
 

don

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பால சரவணன், சிவாங்கி, மிர்ச்சி விஜய், முனீஸ்காந்த், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த திரைப்படம்  நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

don

இந்நிலையில் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் தற்போது ரஜினி, விஜய், அஜித்திற்கு இணையாகவே தமிழ் சினிமாவில் பட்டைய கிளப்பி வருகிறது.  முதல் நாள் முடிவில், ரூ.11 கோடிக்கு மேல் வசூலித்து, அஜித், விஜய் படங்களுக்கு அடுத்து முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற பெருமையை டான் பெற்றுள்ளது. 
 

don

அடுத்தடுத்த நாட்களிலும், நல்ல வசூல் மழையை பெற்று தந்தது. இந்நிலையில், டான் 5 நாட்களில் சுமார் ரூ 38 கோடிகள் வரை தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்துள்ளதாம். 

don

சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இவை மிகப்பெரிய ஓப்பனிங் என்றே கூறப்படுகின்றது. மேலும், இதே நிலை நீடித்தால் வரும் நாட்களில் இப்படம் ரூ 100 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Don

முன்னதாக, டாக்டர் படம் 100 கோடி வசூல் செய்தது. டான் படமும் 100 கோடி வசூல் செய்யும் பட்சத்தில் அடுத்தடுத்து 100 கோடி படங்கள் கொடுத்த ரஜினி, விஜய், அஜித் வரிசையில் சிவகார்த்திகேயன் இணைத்து விடுவார் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றது.

 மேலும் படிக்க...Vikram Story Leak : ரிலீசுக்கு முன்பே லீக் ஆன ‘விக்ரம்’ படத்தின் கதை... ஷாக் ஆன படக்குழு

click me!