யார் யாருக்கு பிளே ஆஃப் வாய்ப்பு? மும்பை, பஞ்சாப் வெளியேற்றம்!

First Published May 10, 2024, 4:39 PM IST

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டிய நிலையில் புள்ளிப்பட்டியலில் 8 மற்றும் 9ஆவது இடங்களில் உள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன.

Indian Premier League 2024

ஐபிஎல் 2024 கிரிகெட் தொடரின் 17ஆவது சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரையில் 58 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 11 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று 1 மற்றும் 2ஆவது இடங்களில் உள்ளன. இந்த அணிகள் எஞ்சிய போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் கூட பிளே ஆஃப் வாய்ப்பை எட்டிவிடும்.

IPL 2024

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடிய 12 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகள் பெற்று 3ஆவது இடத்தில் உள்ளது. எஞ்சிய 2 போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் தோல்வி அடைந்தால் கூட நெட் ரன்ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். 4ஆவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.

IPL 2024 Playoff Chances

இதுவரையில் விளையாடிய 11 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய 3 போட்டிகளில் ஏதேனும் 2ல் வெற்றி பெற்றாலும், அதிக ரன்ரேட் அடிப்படையில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் பிளே ஆஃப் வாய்ப்புக்கு முன்னேறும். ஆனால், மாறாக எஞ்சிய 3 போட்டிகளிலும் சிஎஸ்கே தோல்வி அடைந்தால், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.

IPL 2024 Playoff Chances

விளையாடிய 8 போட்டிகளில் ஒரு வெற்றியோடு புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்திலிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியது.

IPL 2024 Playoff Chances

மேலும் ஆர்சிபிக்கு இன்னும் பிளே ஆஃப் வாய்ப்பு 16.4 சதவிகிதம் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் விளையாடிய 11 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் தற்போது கடைசி இடத்தில் உள்ளது. மேலும், பிளே ஆஃப் வாய்ப்பும் 7.8 சதவிகிதம் வரையில் உள்ளது. இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 59ஆவது லீக் போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி மட்டுமின்றி எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் குஜராத் டைட்டன்ஸ் இருக்கிறது.

click me!