கோடை வெயிலுக்கு 'எந்த' நிற குடை ஏற்றது..? தப்பி தவறி கூட 'இந்த' நிற குடை யூஸ் பண்ணாதீங்க!

First Published May 8, 2024, 11:07 AM IST


கோடையில் கருப்பு குடை பயன்படுத்துவது நல்லதா.. இல்லையா..? என்பதை குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
 

தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள மக்கள் குடைகள் பயன்படுத்துவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதுவும் கருப்பு குடையை தான் மக்கள் அதிகம் பயன்படுத்துவதை பார்க்க முடியும். ஆனால், கோடையில் கருப்பு குடை பயன்படுத்துவது நல்லதா.. இல்லையா..? என்பதை குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

கருப்பு குடை:  கோடையில் கருப்பு கூடை பயன்படுத்தினால் ஓரளவுக்கு மட்டும் தான் சூரியனின் நேரடி வெப்பத்தைத் தடுக்கும். ஆனால் இதை பயன்படுத்தினால் உடலுக்கு மறைமுகமாக கெடுதியை உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், 'VIBGYOR' என்று அழைக்கப்படும் வைலட், இன்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு நிறங்களுமே இல்லாத ஒன்று தான் கருப்பு. மேலும் இந்த நிறத்தின் மீது எந்த நிற ஒளிக்கதிர்கள் பட்டாலும் கருப்பு நிறம் அவற்றை உட்கிரகித்துக்கொள்ளும் தெரியுமா.. 

இதனால்தான், சூரியனிடமிருந்து வரும் ஒளிக் கதிர்களை கருப்பு நிற  குடைகள் உள்வாங்கி அதை தங்க வைத்துக் கொண்டு, வெப்பம் கதிர் வீசல் முறையில் குடையின் கீழ் இருப்பவரை கடுமையாகத் தாக்குகிறது.

இதையும் படிங்க: கோடையில் வீட்டை ஜில்லுனு ஆக்க வந்துவிட்டது.. சுவரில் மாட்டப்படும் ஏர் கூலர்..விலை ரொம்ப கம்மிதான்..

இந்த காரணத்திற்காக தான் வெயிலில் கருப்பு நிற குடையை பயன்படுத்துபவருக்கு வியர்வை அதிகமாக வருவதை காணலாம். அதுமட்டுமின்றி, உடலில் கோடை வெப்பத்தால் கட்டிகள், சரும பதிப்புகள் என போன்ற பிரச்னைகள் வர வாய்ப்பு அதிகம் உண்டு. 

இதையும் படிங்க:  கோடையிலும் உங்க வீட்டு Tank தண்ணி சில்லுனு இருக்க இதை மட்டும் பண்ணுங்க!

கோடைக்கு எந்த நிற குடை நல்லது?: வெள்ளை நிற குடை தன் மீது படும் வெப்ப சூரிய ஒளிக் கதிர்களை தன்னிடம் வைக்காமல் அதை மீண்டும் மேல் நோக்கி திருப்பி அனுப்பி விடும். எனவே தான், கோடை வெயில் காலத்தில் வெப்பத்திலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ள கருப்பு நிற குடைகளை விட, வெள்ளை அல்லது பிற நிற குடைகளை பயன்படுத்துங்கள். அது தான் உங்கள் சருமத்தை வெயில் தாக்கத்தில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!