குலதெய்வ வழிபாடு ஏன் அவசியம்..? மற்ற தெய்வத்திற்கு சக்தி இல்லையா..??

First Published Mar 19, 2024, 10:28 AM IST

குலதெய்வங்கள் மற்றும் அவர்களின் பெருமை என்ன  என்பதை குறித்து தெரிந்துகொள்ளலாம்..

நம்முடைய குலத்தினை காக்கும் தெய்வம் எதுவென்றால் அது 'குலதெய்வம்' ஆகும். குலதெய்வம் தான் தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வமாகும். நம்  குலதெய்வம் தான் பிற தெய்வ வழிபாடுகளின் பலன்களை நமக்கு பெற்று தருகிறது. குலதெய்வம் சின்ன தெய்வமாக இருந்தாலும், அதன் சக்தி அளவிடமுடியாதது... எனவே, அதை ஒருபோதும் அலட்சியப் படுத்தாதீர்கள். உங்களுக்கு தெரியுமா.. எமன் ஒருவரின் உயிரை எடுக்க நினைத்தால், முதலில் அந்நபரின் குலதெய்வத்தின் அனுமதியைப் பெற்று தான் எடுக்க முடியுமாம். 

குலதெய்வம் என்பது நம்முடைய முன்னோர்கள் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்களே ஆகும். இந்த ஆத்மாக்கள் தான் தம்முடைய  குலத்தினை சார்ந்தவர்களை பேணிக் காக்கும் வல்லமை உண்டு.. ஆக, இந்த தெய்வங்கள் தான் 'குலதெய்வங்கள்' என்று அழைக்கப்படுகிறது. கர்மவினைகளையும் நீக்கக் கூடிய வல்லமை இந்த குலதெய்வத்திற்கு உண்டு.

பெண்களுக்கு மட்டும் இரண்டு குலதெய்வங்கள் எப்படி?
பொதுவாகவே, பெண்களுக்கு பிறந்த வீட்டில் ஒன்று.. புகுந்த வீட்டில் ஒன்று என இரண்டு குல தெய்வங்கள் உண்டு. இவர்கள், திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்கி இருப்பார்கள். பின்னர், திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் இருக்கும் குலதெய்வத்தை வணங்க ஆரம்பிப்பார்கள். இதனால் அவர்கள் தங்கள் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவதை மறந்து விடுவார்கள்.

இதையும் படிங்க: உங்கள் குலதெய்வம்  தெரியவில்லையா? தெரிஞ்சிக்க இதை கண்டிப்பாக படிங்க..

ஆனால்,  இப்படி இருக்காமல், அவர்கள் தங்கள் பிறந்த வீட்டின் குலதெய்வத்தையும் வழிப்பட்டு வந்தால் அவர்கள் தங்கள் புகுந்த வீட்டில் எந்த பிரச்சினைகளும் இல்லாமல் நிம்மதியாக வாழ்வார்கள். ஒருவேளை யாரேனும் இதுவரை பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடாமல் இருந்தால், திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை ஆரமியுங்கள்.

இதையும் படிங்க: குலதெய்வம் கோயிலுக்கு இந்த 1 தானம் செய்தால்... எப்பேர்ப்பட்ட பணக்கஷ்டமும் தீருமாம்..!

குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் என்ன செய்வது?
குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் 'திருச்செந்தூர் முருகனை' வணங்கலாம். ஏனெனில், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. இது தீய சக்தியை அழிப்பது மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம் ஆகியவற்றையும் அழிக்கக்கூடிய சக்தி இத்திருத்தலத்திற்கு உண்டு. மேலும், திருச்செந்தூர் முருகனை தொடர்ந்து வழிப்பட்டு அவரை குலதெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!