Weekly Horoscope: இந்த வார ராசி பலன்...30 மே முதல் 5 ஜூன் 2022 வரை....இந்த ராசிகளுக்கு வாழ்வில் வெற்றி உறுதி..

First Published May 29, 2022, 8:00 AM IST

Weekly Horoscope: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இந்த வாரம் ரிஷபம், மீனம் ராசிக்காரர்களுக்கு கிரக நிலை சாதகமாக இருக்கும். சிம்மம், கன்னி ராசிகளுக்கு மிகுந்த எச்சரிக்கை அவசியம். அப்படி இன்றைய 12 ராசிகளில் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மேஷம்:

மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். எந்த வேலையும் அமைதியாய் செய்ய முயற்சி செய்யுங்கள். மற்றவர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்காதீர்கள், உங்கள் திறமையை மட்டும் நம்புங்கள். சில நெருங்கிய நபர்களை சந்திப்பது பலன் தரும். சில நேரங்களில் அதீத நம்பிக்கை உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். பணம் பரிவர்த்தனைகளை கையாளும் போது எச்சரிக்கையுடன் செயல்படவும். மன உளைச்சல் வாழ்க்கை துணையுடன் சிறுசிறு சச்சரவுகளை உண்டாக்கும். செரிமான அமைப்பு பலவீனமாக இருக்கும்.
 

ரிஷபம்:

இந்த வாரம் பெரியவர்களின் மதிப்பும் மரியாதையும் குறைய வேண்டாம். அவர்களின் ஆசியும் ஒத்துழைப்பும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். பக்கத்து வீட்டாருடன் சிறு தகராறு ஏற்படக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ளவும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி இயல்பாக இருங்கள். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். நடப்பு விவகாரங்களில் அதிக கவனம் செலுத்துங்கள்.  குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 

மிதுனம்:
 
இந்த வாரம் ஒரு இளம் குடும்ப உறுப்பினருடன் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படலாம், இதனால் நல்ல பலன் கிடைக்கும். தடைபட்ட சில வேலைகளில் கவனம் செலுத்துங்கள். சில சமயங்களில் நீங்கள் மற்றவர்களின் பேச்சில் சந்தேகம் கொள்ளும் மனப்பான்மையுடன் இருப்பீர்கள், அதனால் உறவுகள் கெட்டுவிடும். இந்த நேரத்தில், கொஞ்சம் அலட்சியம் வேண்டாம். எச்சரிக்கையாக இருங்கள். சில்லறை வியாபாரத்தை விட மொத்த வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். கணவன்-மனைவி வேலைப்பளு காரணமாக வீட்டில் பிரச்சனைகள் வரும். மலச்சிக்கல் மற்றும் வாயு காரணமாக வயிற்று வலி இருக்கும்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கடகம்:

இந்த வாரம் ஒரு சில பிரச்சனைகள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். மற்றவர்களின் பிரச்சினைகள் மற்றும் வேலைகளை தீர்ப்பதில் நீங்கள் முக்கிய பங்கு வகிப்பீர்கள். அவசரம் உங்கள் வேலைகளை குழைத்து போடும். எனவே, எப்போதும் பொறுமையாய் கடைபிடுங்கள்.  வாகனம் அல்லது சொத்துக்கான கடன் வரம்பை மீறக்கூடாது. நிறைய வேலைகள் இருந்தாலும் குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவது குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.  

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

சிம்மம்:

இந்த வாரம்  உங்களுக்கு வீடு, சொத்து வாங்க சரியான நேரமாகும். குழந்தைகளிடம் இருந்து எந்த ஒரு நல்ல செய்தி கிடைத்தாலும் வீட்டில் நல்ல சூழ்நிலை உருவாகும். சில நேரங்களில் அதிகமாக சிந்திப்பது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்சில சமயம் முக்கியமான வேலை கூட கையை விட்டு நழுவிவிடும். எனவே, கவனமுடன் இருங்கள்.  சகோதரர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். தொண்டை வலி மற்றும் இருமல் பிரச்சனையாக இருக்கலாம்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கன்னி:

இந்த வாரம் உங்கள் கடின உழைப்பும், ஒத்துழைப்பும் குடும்பத்தின் ஒற்றுமைக்கு வழி வகுக்கும். உறவுகள் மேம்படும். கோர்ட் வழக்கில் சர்ச்சைகள் அதிகரிக்கலாம். அதிகம் செலவு செய்யாதீர்கள். இந்த நேரத்தில் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள். உங்கள் தனிப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கானமுழு ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்பார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

துலாம்:

 இந்த வாரம் தடைபட்ட காரியம் வெற்றியை தரும். உங்களுக்கு நேரம் இனிமையாக இருக்கும். ஏழைகளுக்கும் பெரியவர்களுக்கும் சேவை செய்வதிலும் நேரத்தை செலவிடுங்கள். அது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.வேலையில் சில பிரச்சனைகள் இருக்கும். வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறலாம். மற்றவர்களின் ஆலோசனையைப் பின்பற்றுவது தீங்கு விளைவிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். வீட்டுச் சூழல் இனிமையாக இருக்கும். மூட்டு வலி திடீரென ஏற்படும்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

விருச்சிகம்:

இந்த வாரம் அவசரமாக எந்த வேலையையும் செய்யாதீர்கள். முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைப் புஉருவாக்குங்கள். மாணவர்கள் போட்டிதேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.  திடீர் செலவுகள் நிதி நிலைமையை மோசமாக்கும். உங்கள் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். வீட்டு மூத்த உறுப்பினர்களின் மரியாதை மற்றும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தேவையில்லாத கோபத்தைத் தவிர்க்கவும். குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

தனுசு:
 
தடைபட்ட அரசு வேலைகள் இந்த வாரம் நல்ல செய்தி வரும். எனவே உங்கள் முழு கவனத்தையும் அதில் வைத்திருங்கள். உங்கள் கனவுகள் மற்றும் லட்சியங்களை நிறைவேற்ற மிகவும் சாதகமான வாரம். வீட்டின் பெரியவர்களிடம் மரியாதையை கடைபிடியுங்கள். வெளியாட்களால் வீட்டில் சற்று பதற்றம் ஏற்படலாம். பண விஷயத்தில் யாரையும் நம்பாமல் எல்லா முடிவுகளையும் நீங்களே எடுங்கள். ஊடகம் தொடர்பான வியாபாரத்தில் சரியான வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நல்ல சூழல் நிலவும். வாகனம், சொத்து வாங்கலாம்.
 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மகரம்:

கடந்த சில கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் கற்று, புதிய வழி பிறக்கும். தொலைந்து போன ஒன்று திடீரென்று கிடைத்தாலோ அல்லது மனதிற்குபிடித்த வேலையாக அமைந்தாலோ மனம் மகிழ்ச்சியடையும். அவசர முடிவுகளை எடுக்காமல், நிதானத்துடன் செயல்படுங்கள். வேறு யாரிடமும் உதவி பெறாமல், உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். உடல்நலம் தொடர்பான விஷயங்களில் பிரச்சனை வரும். குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கும்பம்:

இந்த வாரம் உங்கள் நிதி திட்டங்களில் அதிக நேரம் செலவிடுங்கள். நேரம் சாதகமாக உள்ளது. இந்த நேரத்தில், நீங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய முடியும். மனதிற்குப் பிடித்த வேலைகள் செய்வதால், புத்துணர்ச்சியும் மன அழுத்தமும் இல்லாமல் இருப்பீர்கள். பிள்ளைகளால் சில மனக்கசப்புகள் வரலாம். பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காணவும். இந்த வாரம் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மீனம்:

இந்த நேரத்தில் கிரக நிலை இரண்டும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் ஒரு சொத்தை விற்க திட்டமிட்டால், இந்த நேரம் உங்களுக்கு சரியான நேரமாகும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த தொழில் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும். எனவே உங்கள் பணிகளில் கவனம் செலுத்துங்கள். இந்த நேரத்தில் உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்திருப்பது நல்லது. நீண்ட நாட்களாக  தடைபட்டிருந்த தொழில் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.


 மேலும் படிக்க.....Guru Peyarchi 2022: மீன ராசியில் குரு - சுக்கிரன் சந்திப்பு...இந்த ராசிகளின் வாழ்வில் பணம் மழையாய் பொழியும்...

click me!