எப்போதுமே உலகின் பணக்கார இந்திய தொழிலதிபர் இவர் தான்.. அம்பானி, அதானிலாம் கிட்ட கூட நெருங்க முடியாது..

First Published May 8, 2024, 9:38 AM IST

முகலாய காலத்தில் ஒரு முக்கிய தொழிலதிபரான விர்ஜி வோரா, பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் உலகளவில் பணக்கார வணிகராகப் போற்றப்பட்டவர்.

வரலாறு முழுவதுமே, இந்தியர்கள் பல்வேறு துறைகளில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். நாடு சுதந்திரம் அடையும் முன்பே,   ஏராளமான வெற்றிகரமான தொழில்முனைவோர் உருவாகியுள்ளனர். அந்த வகையில் முகலாய காலத்தில் ஒரு முக்கிய தொழிலதிபரான விர்ஜி வோரா, பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் உலகளவில் பணக்கார வணிகராகப் போற்றப்பட்டவர்.

விர்ஜி வோரா 1617 முதல் 1670 வரை, கிழக்கிந்திய கம்பெனியின் குறிப்பிடத்தக்க நிதி ஆதரவாளராக இருந்தார் என்று வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.

1590 இல் பிறந்த விர்ஜி வோரா தனது வாழ்நாளில் கணிசமான செல்வத்தைச் சேர்த்தார், அவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 8 மில்லியன் என மதிப்பிடப்பட்டது.. இதன் மூலம் அவர் வாழ்ந்த காலத்தில் பணக்கார இந்திய தொழிலதிபராக அவர் மாறினார்..  மிளகு, தங்கம் மற்றும் ஏலக்காய் உட்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் அவரின் வணிகம் பரவியது..

1629 முதல் 1668 வரை ஆங்கிலேயர்களுடனான விர்ஜி வோராவின் நெருங்கிய உறவுகள் அவரது வணிகப் பேரரசின் விரிவாக்கத்திற்கு உதவியது. வோராவின் மூலோபாயம் பெரும்பாலும் முழு தயாரிப்புப் பங்குகளையும் ஏகபோகமாக்கி, கணிசமான லாபத்தில் விற்பதை உள்ளடக்கியது.

கூடுதலாக, வோரா ஒரு நிதியுதவியும் வழங்கினார். தனியார் நிறுவனங்களை நிறுவ விரும்பும் ஆங்கிலேயர்களுக்கு நிதி உதவி வழங்கினார். முகலாய பேரரசர் ஔரங்கசீப் தனது தக்காணப் பிரச்சாரத்தின் போது நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டபோது, முகலாய மன்னர் ஷாஜஹானுக்கு நான்கு அரேபிய குதிரைகளை பரிசாக அளித்த விர்ஜி வோராவிடம் உதவி கோரினார் என்று வரலாறு கூறுகிறது.

click me!