ரிலே ரோஸோவிற்கு பதிலடி கொடுத்த கோலி - துப்பாக்கி சுடுவது போன்று ஆக்‌ஷன் காட்டிய விராட் கோலி – வைரல் வீடியோ!

First Published May 10, 2024, 11:24 AM IST

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 58ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி துப்பாக்கி சுடுவது போன்று ஆக்‌ஷன் காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

Virat Kohli and Rilee Rossouw

தரம்சாலாவில் நடைபெற்ற 58ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் விராட் கோலி 92 ரன்கள் எடுத்து 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஜத் படிதார் 55 ரன்களில் வெளியேறினார். இதே போன்று கேமரூன் க்ரீன் 46 ரன்களில் நடையை கட்டினார்.

Punjab Kings vs Royal Challengers Bengaluru, 58th Match

இறுதியாக ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். பிராப்சிமன் சிங் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜானி பேர்ஸ்டோவ் 27 ரன்களில் வெளியேறினார்.

Punjab Kings vs Royal Challengers Bengaluru, 58th Match

ரிலீ ரோஸோவ் மட்டுமே அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 61 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் அரைசதம் அடித்ததை வானத்தை நோக்கி துப்பாக்கி சுடுவது போன்று சைகை காட்டி கொண்டாடினார்.

Punjab Kings vs Royal Challengers Bengaluru, 58th Match

இந்த நிலையில் தான் கரண் சர்மா வீசிய போட்டியின் 8.6ஆவது ஓவரில் ரிலீ ரோஸோவ் 61 ரன்கள் எடுத்து வில் ஜாக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அவரது விக்கெட்டை வில் ஜாக்ஸ் கொண்டாடினாரோ இல்லையோ விராட் கோலி வித்தியாசமாக கொண்டாடியுள்ளார். அவர், துப்பாக்கி சுடுவது போன்று ஆக்‌ஷன் காட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.

Punjab Kings vs Royal Challengers Bengaluru, 58th Match

ஷஷாங்க் சிங் 37 ரன்களில் ரன் அவுட்டில் வெளியேற மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்ட பஞ்சாப் கிங்ஸ் 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Punjab Kings vs Royal Challengers Bengaluru, 58th Match

இந்த தோல்வியின் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 12 போட்டிகளில் 4 வெற்றி, 8 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்துள்ளது. எனினும், பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து 2ஆவது அணியாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இதன் மூலமாக தொடர்ந்து 10ஆவது முறையாக பஞ்சாப் கிங்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.

Punjab Kings vs Royal Challengers Bengaluru, 58th Match

இதற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றவே, மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!