ஜெயிலர் சாதனையை அடித்துநொறுக்கி... முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய லியோ

First Published Oct 20, 2023, 8:40 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது.

Leo

கோலிவுட்டில் மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். இவரின் 67-வது படமான லியோவை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் மாஸான வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷ் கனகராஜும் இணையும் இரண்டாவது படம் இது என்பதால், லியோ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ திரைப்படம் நேற்று உலகளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.

Leo vijay

அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. லியோ திரைப்படம் தமிழகத்தில் சோலோவாக ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் மட்டும் இப்படம் சுமார் 850க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி கேரளாவிலும் லியோ படத்துக்கு போட்டியாக எந்த படமும் வெளியாகவில்லை. இதனால் அங்கும் இப்படம் மாஸான வரவேற்பை பெற்று வருகிறது. இதுதவிர வெளிநாடுகளிலும் லியோ மாஸ் காட்டி வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Leo box office

விஜய் படம் என்றாலே பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும். அதேபோல் தான் லியோ திரைப்படமும் செம்ம வசூல் வேட்டை நடத்தி இருக்கிறது. இப்படம் முதல் நாளிலேயே ரூ.125 கோடிக்கு மேல் உலகளவில் வசூலை வாரிக்குவித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் லியோ திரைப்படம் ரூ.32 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் லியோ படம் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது.

Leo day 1 collection

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் லியோ திரைப்படம் ரூ.15 கோடி வசூலித்துள்ளது. அதேபோல் கர்நாடகாவில் கன்னட சூப்பர்ஸ்டார் நடித்த கோஸ்ட் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆனாலும் அங்கு லியோ படத்துக்கு முதல் நாளில் ரூ.13 கோடி வசூல் கிடைத்துள்ளதாம். நடிகர் விஜய்யின் கோட்டையாக கருதப்படும் கேரளாவில் லியோ திரைப்படம் முதல் நாளில் ரூ.11 கோடி வசூலை வாரிக்குவித்து இருக்கிறது. இதுதவிர இந்தியாவின் இதர மாநிலங்களில் ரூ.3 கோடி வசூலித்துள்ளது லியோ.

Leo beats jailer

லியோ படத்திற்கு வெளிநாட்டில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் வெளிநாடுகளில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் முதல் நாளில் அதிக வசூலை வாரிக்குவித்த படமாக ரஜினிகாந்தின் ஜெயிலர் இருந்த நிலையில், லியோ திரைப்படம் அச்சாதனையை அசால்டாக முறியடித்துள்ளது. இதன்மூலம் நடிகர் விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் மார்தட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...  லியோ படம் பார்ப்பதற்கு முன்பு.. இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்திட கோரி விஜய் ரசிகர்கள் மௌனம் அனுசரிப்பு!

click me!