சம்பள விஷயத்தில் இப்போ விஜய் தான் டாப்! கடைசி படத்துக்காக தளபதிக்கு வாரி வழங்கப்பட உள்ள சம்பளம் இத்தனை கோடியா?

First Published Mar 19, 2024, 1:54 PM IST

சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ள நடிகர் விஜய், தன்னுடைய கடைசி படமான தளபதி 69-க்கு வாங்க உள்ள சம்பளம் பற்றி தற்போது பார்க்கலாம்.

Vijay

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். அவர் நடிப்பில் தற்போது கோட் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்யுடன் மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

Thalapathy Vijay

அதன்படி கோட் பட இறுதிக்கட்ட ஷூட்டிங் கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது. அங்குள்ள கிரீன் ஃபீல்டு ஸ்டேடியத்தில் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இதற்காக கேரளா சென்றுள்ள நடிகர் விஜய்க்கு அங்குள்ள ரசிகர்கள் தடபுடலாக வரவேற்பு அளித்தனர். கோட் படத்தில் நடித்து முடித்த கையோடு, நடிகர் விஜய் அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிக்கிறார்.

இதையும் படியுங்கள்... உயிர் முக்கியம் பிகிலு... ரோட்ட பார்த்து ஓட்டு - பைக்கில் துரத்தி வந்த ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்ட விஜய்

Vijay Last Movie Thalapathy 69

தளபதி 69 படத்தோடு சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார் விஜய். இதனால் அப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கான இயக்குனர் தேர்வில் கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில், இறுதியாக இயக்குனர் ஹெச்.வினோத் தான் தளபதி 69 படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vijay Salary for Thalapathy 69

இந்த நிலையில் தளபதி 69 படத்தில் நடிக்க நடிகர் விஜய் வாங்க உள்ள சம்பளம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. அதன்படி அவருக்கு இப்படத்திற்காக ரூ.250 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாம். இந்த தகவல் தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுமட்டும் உறுதியானால் கோலிவுட்டில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருப்பார். அவருக்கு கோட் படத்தில் நடிப்பதற்காக ரூ.200 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Vijay Car : நடிகர் விஜய் நடத்திய ரோட் ஷோவால் ஸ்தம்பித்த கேரளா.... சல்லி சல்லியாய் நொறுக்கப்பட்ட தளபதியின் கார்

click me!