‘தல’ அஜித் கழட்டிவிட்ட விக்னேஷ் சிவனுக்கு ‘தல’ தோனி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு - வாயடைத்துப்போன விக்கி

First Published Oct 17, 2023, 2:01 PM IST

கிரிக்கெட் உலகின் லெஜண்ட்டாக கருதப்படும் எம்.எஸ்.தோனியை இயக்கிய வாய்ப்பு கிடைத்தது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

MS dhoni, vignesh shivan

தமிழ் திரையுலகில் இளம் இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துகொண்ட விக்கி, திருமணத்துக்கு பின்னர் ஒரு படத்தை கூட இயக்கவில்லை. இவர் இயக்கத்தில் கடைசியாக ரிலீஸ் ஆன திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் உருவாக இருந்த ஏகே 62 படத்தை இயக்க கமிட் ஆகி இருந்தார் விக்னேஷ் சிவன்.

Dhoni, vignesh shivan, yogibabu

லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகளிலும் பிசியாக இருந்தார் விக்கி. ஆனால் கடந்த ஜனவரி மாதம் அப்படத்தின் ஷூட்டிங் தொடங்க இருந்த சமயத்தில், திடீரென விக்னேஷ் சிவனை அப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கினர். அவர் சொன்ன கதையில் இரண்டாம் பாதி கதை திருப்தி அளிக்காததால அவரை நீக்கிவிட்டதாக கூறப்பட்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

vignesh shivan direct MS dhoni ad

அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை விக்னேஷ் சிவன் வெளியிடவில்லை. இருப்பினும் அவர் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து தான் படம் இயக்கப்போகிறார் என்கிற தகவல் ஏற்கனவே லீக் ஆகிவிட்டாலும் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் சீக்ரெட்டாக வைத்துள்ளார் விக்கி. அதற்கான அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் விக்னேஷ் சிவன்.

vignesh shivan about MS Dhoni

அதன்படி கிரிக்கெட் உலகின் லெஜண்ட்டாக கருதப்படும் எம்.எஸ்.தோனி நடித்த விளம்பரத்தை தான் இயக்கியது குறித்து அவர் நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார். தான் கடவுளாக கருதும் ஒருவரை இயக்கிய வாய்ப்பு கிடைத்தது தன் வாழ்நாளில் மறக்க முடியாது என நெகிழ்ச்சி உடன் கூறி உள்ளார் விக்கி. இந்த விளம்பரத்தில் எம்.எஸ்.தோனி உடன் சேர்ந்து நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் நடித்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து விக்கி எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ஆத்தி இந்த டாஸ்க்கா... இந்த வாரம் பிக்பாஸ் வீடே கண்ணீர் கடலில் மூழ்கப்போகுது!

click me!