SK 23 movie Villain : சிவகார்த்திகேயனை பதம் பார்க்க பாலிவுட்டில் இருந்து வில்லனை களமிறக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்

First Published Apr 1, 2024, 1:58 PM IST

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் எஸ்.கே 23 திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் பற்றிய அப்டேட் வந்துள்ளது.

Sivakarthikeyan, AR murugadoss

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது அமரன் மற்றும் எஸ்.கே.23 ஆகிய இரண்டு படங்கள் தயாராகி வருகிறது. இதில் அமரன் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.

sivakarthikeyan, Murugadoss, Anirudh

அதேபோல் சிவகார்த்திகேயனின் கைவசம் உள்ள மற்றுமொரு திரைப்படம் எஸ்.கே.23, இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மிணி வசந்த் என்கிற கன்னட நடிகை நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கிய எஸ்.கே.23 படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அப்டேட்டும் காத்துவாக்குல கசிந்த வண்ணம் உள்ளது. 

இதையும் படியுங்கள்... Jayam Ravi Father : நான் இஸ்லாமியர், மனைவி பிராமின்! 3 முறை திருமணம் செய்தது பற்றி... ஜெயம் ரவி தந்தை ஓபன்டாக்

vidyut jamwal

அந்த வகையில் தற்போது கிடைத்துள்ள லேட்டஸ்ட் தகவலின் படி எஸ்.கே.23 படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் வித்யூத் ஜமால் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது சிவகார்த்திகேயன், வித்யூத் ஜமால் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இப்படத்தின் மூலம் தான் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். இதுகுறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SK 23 villain vidyut jamwal

நடிகர் வித்யூத் ஜமால் தமிழில் விஜய்க்கு வில்லனாக துப்பாக்கி படத்தில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆனார். அப்படத்தையும் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். அதன்பின்னர் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் வில்லனாக களமிறங்கி இருக்கிறார் வித்யூத் ஜமால், துப்பாக்கி பட மேஜிக் எஸ்.கே.23 படத்திலும் ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... த்ரிஷாவுக்கு அடித்த ஜாக்பாட்! அஜித், மோகன் லால், சிரஞ்சீவியை தொடர்ந்து மற்றொரு டாப் நடிகருக்கு ஜோடியாகிறாரா?

click me!