Upcoming Mobile: இப்போ போன் வாங்க போறீங்களா.. வெயிட் பண்ணுங்க.. 5 ஸ்மார்ட்போன் வரப்போகுது..

First Published Mar 31, 2024, 3:53 PM IST

அடுத்த மாதம் வெளியாக உள்ள புதிய ஸ்மார்ட் போன்கள் பற்றியும், அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

சாம்சங் கேலக்சி எம்55 (Samsung Galaxy M55) அடுத்த மாதம் வெளியாக உள்ளது. விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 செயலி வழங்கப்பட உள்ளது. இந்த போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படும். இந்த போன் ரூ. 30 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த ரியல்மி (Realme) நிறுவனம் ரியல்மி ஜிடி 5 ப்ரோ (Realme GT 5 Pro) என்ற புதிய போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போனில் 5400 mAh பேட்டரி வழங்கப்படும். இந்த போன் 100 வாட்ஸ் வேகமாக சார்ஜ் செய்வதை ஆதரிக்கும். இது 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும்.

ஒன்ப்ளஸ் நார்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) என்பது அறிமுகத்திற்கு தயாராக உள்ள ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது ஏப்ரல் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும். இது Snapdragon 7 Gen 3 SoC செயலி மூலம் இயக்கப்படும். இந்த போனின் விலை ரூ. 27 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ (Moto Edge 50 Pro) இந்த மாதம் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இந்த போன் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படும். இது 6.7 இன்ச் 1.5K ரெசல்யூஷன் வளைந்த OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இந்தத் திரையில் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதம் உள்ளது.

கூகுள் நிறுவனம் பிக்சல் 8ஏ என்ற புதிய போனை கொண்டு வருகிறது. இந்த போன் மே மாதம் அறிமுகம் செய்யப்படும். இது Google AI அம்சங்களை வழங்கும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று ஆகும்.

click me!