ஒரே ஆண்டு தீபாவளிக்கு போட்டி போட்டு ரிலீஸ் ஆன கமல்ஹாசனின் 4 படங்கள்... அதில் 3 வேறலெவல் ஹிட்

First Published Feb 6, 2024, 12:01 PM IST

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த நான்கு திரைப்படங்கள் ஒரே ஆண்டில் அதுவும் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகியுள்ள சுவாரஸ்ய தகவல் பற்றி பார்க்கலாம்.

Kamal Diwali Release Movies on 1978

தீபாவளி என்றாலே புதுப்படங்களுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்கள் தீபாவளிக்கு போட்டி போட்டு ரிலீஸ் ஆகும். தீபாவளிக்கு முன்னணி நடிகர்கள் நடித்த ஒரு படம் ரிலீஸ் ஆனாலே தியேட்டர்கள் திருவிழாக்கோலம் போல காட்சியளிக்கும். அப்படி இருக்கையில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1978-ம் ஆண்டு தீபாவளிக்கு மட்டும் நான்கு படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

சிகப்பு ரோஜாக்கள் (sigappu rojakkal)

பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சிகப்பு ரோஜாக்கள். கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே இயக்கிவந்த பாரதிராஜா முதன்முறையாக இயக்கிய ஒரு திரில்லர் கதையம்சம் கொண்ட படம் தன் இந்த சிகப்பு ரோஜாக்கள். ஏராளமான டுவிஸ்ட்டுகள் நிறைந்த இப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருப்பார். இப்படம் 1978-ம் ஆண்டு அக்டோபர் 28-ந் தேதி திரைக்கு வந்தது. இதில் கமலுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார்.

மனிதரில் இத்தனை நிறங்களா (manidharil ithanai nirangala)

1978-ம் ஆண்டு தீபாவளிக்கு சிகப்பு ரோஜாக்கள் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன மற்றொரு கமல் படம் தான் மனிதரில் இத்தனை நிறங்களா. இதிலும் கமலுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி தான் நடித்திருந்தார். ஷியாம் இசையமைத்த இப்படத்திற்கு கண்ணதாசன் பாடல் வரிகளை எழுதி இருந்தார். ஆர்.சி.சக்தி இயக்கிய இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 

இதையும் படியுங்கள்... கோடி கோடியாய் கொட்டும் துட்டு... ரஜினி, விஜய்யை பின்னுக்கு தள்ளி கோலிவுட்டின் பணக்கார நடிகரானது யார் தெரியுமா?

அவள் அப்படித்தான் (aval appadithan)

1978-ம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த கமலின் மற்றுமொரு மாஸ்டர் பீஸ் படம் தான் அவள் அப்படித்தான். இதில் ரஜினியும் கமலும் இணைந்து நடித்திருந்தனர். ருத்ரைய்யா இயக்கிய இப்படம் அந்த ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி ரிலீஸ் ஆனது. ரஜினி, கமல் இருவரது கெரியரிலும் மறக்கமுடியாத படமாக இந்த அவள் அப்படித்தான் திரைப்படம் அமைந்திருந்தது. இப்படத்தில் ஸ்ரீபிரியா கதாநாயகியாக நடித்திருந்தார்.

தப்புத்தாளங்கள் (thappu thalangal)

1978-ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன கமலின் நான்காவது திரைப்படம் தப்புத்தாளங்கள். பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் சரிதா தான் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருந்தனர். கமல்ஹாசன் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இப்படமும் அந்த ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி திரைக்கு வந்து மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Thug Life.. 36 ஆண்டுகள் கழித்து உருவாகும் மேஜிக் - இதற்கிடையில் மணிரத்னத்தின் படத்தை இரு முறை தவறவிட்ட கமல்!

click me!