Happy Ugadi 2024 : இன்று உகாதி... இந்த தவறை ஒருபோதும் செய்யாதீங்க..!

First Published Apr 9, 2024, 9:31 AM IST

இன்று உகாதி. எனவே, இந்நாளில் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
 

'உகாதி' என்பது தெலுங்கு பேசும் மக்களால் கொண்டாடும்  பண்டிகையாகும். இந்த பண்டிகையுடன் தான் இவர்களுக்கு புத்தாண்டு ஆரம்பமாகிறது. 
அதனால்தான் இது தெலுங்கு பேசும் மக்களின் முதல் பண்டிகையாக மாறியது என்றே சொல்லலாம்.

உகாதி என்ற பெயரைக் கேட்டாலே இயற்கையின் அற்புதமான காட்சிகள் தான் நினைவுக்கு வருகிறது. ஏனெனில், வசந்த காலத்தில் வருகையை குறிப்பதே உகாதி பண்டிகையின் முக்கியத்துவம் ஆகும். மரங்கள் மலர்ந்து நறுமணத்துடன் பூக்கும். அதனால்தான் உகாதி புதிய ஒன்றின் தொடக்கமாக வர்ணிக்கப்படுகிறது.
 

ஆனால், ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு தனி சிறப்புகள் உண்டு.. அந்த நாட்களில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத என 
சில விஷயங்கள் இருக்கும். அதன்படி, இந்த உகாதி நாளில் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படிங்க:  Happy Ugadi 2024 : நாளை தெகுங்கு வருட பிறப்பு.. தேதி, சுப நேரம் மற்றும் முக்கியத்துவம் இதோ!

செய்யக்கூடாதவை: பொதுவாக பலருக்கு காலை தாமதமாக எழுவதுதான் வழக்கம். ஆனால், உகாதி நாளில் தாமதமாக எழுவது நல்லதல்ல. அதுபோல, சிலருக்கு பண்டிகை நாட்களில் மது அருந்துவது வழக்கம். ஆனால், இந்த உகாதி நாளில் இறைச்சி மற்றும் மதுவை தொடவே கூடாது. உகாதி நாளில் பஞ்சாங்கம் கேட்பார்கள், தெற்கு நோக்கி அமர்ந்து கேட்க கூடாது. இந்த தவறுகளை உகாதி நாளில் செய்யாமல் இருந்தால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம்.

இதையும் படிங்க: Ugadi Recipes 2024 : தெலுங்கு புத்தாண்டை வரவேற்கும் பாரம்பரிய உணவுகள்...

செய்யக்கூடியவை: யுகாதி நாளில் புதிய குடை வாங்குவது நல்லது. காரணம், வருடம் முழுவதும் பணம் உங்கள் வீட்டில் தங்கும் என்பது ஐதீகம்.   மேலும் உகாதி நாளில் புதிய ஆடைகள் மற்றும் நகைகள் வாங்குவது வழக்கம். உகாதி பூஜையை வீட்டில் உற்சாகத்துடன் செய்யுங்கள். அதுபோல உகாதி நாளில் அன்னதானம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இவற்றை கண்டிப்பாக செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!