Today Gold Rate in Chennai: நகை வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?

First Published Apr 14, 2024, 11:34 AM IST

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

Gold Rate

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடிக்கிறது. 

Yesterday Gold Rate

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,240க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,780-க்கு விற்பனையானது.

Gold Rate in Tamilnadu

Today Gold Rate

இன்றைய (ஏப்ரல் 14) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் சவரன் ரூ.54,240-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.6,780-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,275ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.58,200-ஆக விற்பனையாகிறது. 

Today Silver Rate

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.89.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

click me!