Mr Manaivi : மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகிய ஷபானா... அவருக்கு பதில் நடிக்கப்போவது யார் தெரியுமா?

First Published Apr 17, 2024, 8:42 AM IST

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து நடிகை ஷபானா விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக நடிக்க உள்ள நடிகை பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷபானா. அந்த சீரியல் முடிவுக்கு வந்ததை அடுத்து சன் டிவிக்கு தாவிய ஷபானா, மிஸ்டர் மனைவி என்கிற சீரியலில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனார். கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் ஒரு ஆண்டை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பவன் ரவீந்திராவுக்கு ஜோடியாக அஞ்சலி தேவி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஷபானா.

Mr, Manaivi Serial

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார் ஷபானா. அவர் என்ன காரணத்துக்காக விலகினார் என்பதை வெளியிடாததால், அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால் தான் சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்றும் செய்திகள் பரவத் தொடங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷபானா, தான் கர்ப்பமாக இருப்பதாக பரவும் தகவல் உண்மையில்லை என்று விளக்கம் அளித்தார்.

இதையும் படியுங்கள்... அட கடவுளே... பணத்துக்காக வயசு வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட நடிகைகள்! யார் யார் தெரியுமா?

இதையடுத்து மிஸ்டர் மனைவி சீரியலில் ஷபானாவுக்கு பதிலாக அஞ்சலி தேவி கேரக்டரில் நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அந்த நடிகை குறித்த அப்டேட் கசிந்துள்ளது. அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல தொடரில் நடித்து வரும் தேப்ஜானி மோடக் தான் ஷபானாவுக்கு பதிலாக மிஸ்டர் மனைவி சீரியலில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம்.

ஷபானாவைப் போல் தேப்ஜானி மோடக்கும் அஞ்சலி கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்ப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மிஸ்டர் மனைவி சீரியலில் தேப்ஜானி மோடக் நடித்த காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை தேப்ஜானி மோடக் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, பெங்காலி மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 'ஜெயிலர் 2' படம் குறித்து மனம் திறந்த நடிகர் வசந்த் ரவி! பத்திரிக்கையாளர்கள் முன் கொண்டாடி மகிழ்ந்த பிறந்தநாள்

click me!