Rahu Ketu Peyarchi: ராகு கேதுவின் அருளால் அடுத்த 2023 வரை...கஜகேசரி யோகம் பெறும் ராசிகள்...நீங்கள் என்ன ராசி ?

First Published May 23, 2022, 8:00 AM IST

Rahu Ketu Peyarchi  Palangal 2022: நிழல் கிரகமான ராகு, மற்றும் கேது சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் தனது ராசி மாறியுள்ளனர். இவர்கள் அக்டோபர் 2023 வரை அங்கு தங்குவார்கள்.இதனால் எந்தெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.

Rahu ketu peyarchi 2022

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சியாகும் ராகு மற்றும் கேது கிரகம் கடந்த 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி தனது ராசியை மாற்றியுள்ளனர். தீய கிரகமாக கருதப்படும் ராகு, மற்றும் கேது சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு ராசி மாறியுள்ளனர். இவர்கள்  அக்டோபர் 2023 வரை அங்கு தங்குவார்கள்.

Rahu ketu peyarchi 2022

Rahu ketu peyarchi 2022

ராகு கேதுவின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். தற்போது ராகு மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் உள்ளனர். ராகு, கேதுவின்  இந்த ராசி மாற்றம் குறிப்பிட்ட  சில ராசிகளுக்கு சுப பலன்களை தருகிறது. அப்படி யார் யாருக்கு என்னென்னெ பலன்களை தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
 

rahu ketu peyarchi 2022

ரிஷபம்: 

ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு கிரகத்தின் நிலை மாற்றம் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, அதிர்ஷ்டம் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். புதிய வழிகளில் பணம் வரும். பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். 

Gemini Zodiac

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு ராகு கேதுவின் மாற்றம் 2023 வரை சுப பலன்களை அள்ளித் தரும். நீங்கள் எதிர்பாராத திடீர் பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய நட்பு வட்டம் விரிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வெற்றி நிச்சயம். உங்கள் ஆளுமை மேம்படும், கௌரவம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும்.  

Astrology-The girl by this name is lucky

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு  ராகு கேதுவின் மாற்றம் அக்டோபர் 2023 வரை ராகு நல்ல பலன்களைத் தருவார். இவர்களுக்கு பல இடங்களிலிருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் பெருகும். ஆரோக்கியம் மேம்ப்படும். செல்வமும் பெருகும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.

Libra

துலாம்: 

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு, கேது பெயர்ச்சியால் உங்களுக்கு 2023 வரை சிறப்பான பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புது யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய சிந்தனைகள் பிறக்கும்.  மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் யோகம் உண்டு. 

மேலும் படிக்க....Guru Peyarchi 2022: குரு பகவான் நேரடி அருள்..அடுத்த 7 மாதங்கள் மகிழ்ச்சி கடலில் தத்தளிக்கும் 5 ராசிகள்..

click me!