இந்த 5 நாடுகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் இங்கு ஒரு விமான நிலையம் கூட இல்லை..!

First Published Apr 8, 2024, 12:38 PM IST


உலகளவில் இந்த 5 நாடுகளில் ஒரு விமான நிலையம் கூட இல்லை என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

பொதுவாகவே, நாம் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விமானம் மூலம் தான் செல்வது வழக்கம். இதற்காக, ஒவ்வொரு நாட்டிலும் விமான நிலையங்கள் இருக்கும். ஆனால் உலகில் இந்த 5 நாடுகளில் ஒரு விமான நிலையம் கூட இல்லை என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அந்த 5 நாடுகள் எவை என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்..

வாடிகன் சிட்டி: ஐரோப்பாவில் அமைந்துள்ள உலகின் மிகச் சிறிய நாடான வாடிகன் நகரத்திலும் விமான நிலையம் இல்லை. இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 108.7 ஏக்கர் தான்

சான் மரினோ: உலகின் பழமையான நாடுகளில் ஒன்றான சான் மரினோவில் ஒரு விமான நிலையம் கூட இல்லை. எனவே, இங்குள்ள மக்கள் பிற நாடுகளுக்கு செல்ல  இத்தாலியில் உள்ள ரிமினி விமான நிலையத்தை தான் பயன்படுகின்றனர்.

மொனாக்கோ: வாடிகன் நகரத்திற்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகச் சிறிய நாடு இதுவாகும். மொனாக்கோ மூன்று பக்கங்களிலும் பிரான்சில் சூழப்பட்டுள்ளது. இந்த நாட்டிலும் ஒரு விமான நிலையம் கூட இல்லை. 

இதையும் படிங்க:  சென்னை விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசையா? டிகிரி படிச்சிருந்தா போதும்! உடனே அப்ளை பண்ணுங்க!

லிச்சென்ஸ்டீன்: லிச்சென்ஸ்டைன் ஒரு சிறிய நாடு. இது 75 கிமீ வரை தான் நீண்டுள்ளது. இதனால் இந்த நாட்டில் விமான நிலைய வசதி இல்லை. இருப்பினும், இங்குள்ள மக்கள் சுவிட்சர்லாந்தில் இருக்கும் சூரிச் விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க: Airport Rules Change: விமான பயணத்தின் போது இந்த பொருட்களை எடுத்து செல்ல முடியாது.. என்னெவெல்லம் தெரியுமா?

அன்டோரா: இது மற்ற நாடுகளை போல சிறிய நாடு அல்ல. பல விமான நிலையங்களை உருவாக்க முடியும். ஆனால் இங்கு மலைகள் தான் பெரிய பிரச்சனை. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையே அமைந்துள்ள இந்த நாடு மலைகளால் சூழப்பட்டதால் இங்கு விமானம் ஓட்டுவது ஆபத்தானது. அதனால்தான் இந்த நாட்டில் விமான நிலையம் இல்லை. இருப்பினும் மக்கள் பார்சிலோனா, லெரிடா அல்லது வெரோனா போன்ற நகரங்களில் இருந்து பறக்க முடியும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!