Sukran Peyarchi 2022: கடக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி...வாழ்வில் புது ஒளி பிறக்கும், தொழிலில் வெற்றி உறுதி...

First Published Jun 2, 2022, 4:00 PM IST

Sukran Peyarchi 2022 Palangal: ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் ஜூன் 22 அன்று கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் சுக்கிரன் பிரவேசிப்பார். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும்.

shukra upay 001

சுக்கிரன் பெயர்ச்சி 2022:

சுக்கிரன் கிரகம் பொருள் இன்பத்தின் காரணியாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால், அந்த நபர் நிதி நெருக்கடி உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்படுவார். அதே நேரத்தில், சுக்கிரன் வலுவாக இருக்கும்போது, ​​அந்த நபர்களுக்கு செல்வம், புகழ். மரியாதை என அனைத்தும் வந்து சேரும். 

ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் ஜூன் 22 அன்று கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் சுக்கிரன் பிரவேசிப்பார். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். இது சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். அப்படி யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

sukran peyarchi 2022

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் பண வரவு உண்டாகும்.குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மதம் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்வில் புதிய வேலையைத் தொடங்க இதுவே நல்ல நேரம் ஆகும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். 

sukran peyarchi 2022

மிதுனம்:

மிதுனம்  ராசிக்காரர்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நண்பரின் உதவியால் வியாபாரம் வேகமெடுக்கும்.புதிய வியாபாரத்திற்கான சில திட்டங்கள் நிறைவேறும்.வேலையில் வெற்றி உண்டாகும். தொழிலில் லாபம் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.

sukran peyarchi 2022

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் ஜூன் மாதம் முழுவதும் சிறப்பாக இருக்கும். கல்விப் பணிகளில் முன்னேற்றம் இருக்கும். தொழில் நிலை மேம்படும். குடும்பத்தில் சமய காரியங்கள் நடைபெறலாம்.தொழிலில் மரியாதை கிடைக்கும். வியாபாரம் செய்யும் யோகம் கிடைக்கும். நீண்ட பயணங்கள் மேற்கொள்ளப்படும். உங்கள் தொலைதூர பயணம் வெற்றியடையும்.

sukran peyarchi 2022

கும்பம்:
 
கும்ப ராசிக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியம் முடிவடையும். நிதி நிலை மேம்படும். கும்ப ராசிக்காரர்கள் புதிய பயணம் செல்ல வாய்ப்பு உண்டாகும்.  இந்த பயணத்தால் நல்ல ஆதாயம் ஏற்படும். அன்னை லட்சுமியின் அருளால் செல்வம் பெருகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.  

மேலும்  படிக்க....Horoscope: கிரகம் மாற்றம் மகரம், துலாம் ராசிக்காரர்களுக்கு விரைவில் பண மழை பொழியும்..இன்றைய 12 ராசிகளின் பலன்

click me!