Sani Peyarchi 2022: ஜூன்5 ம் தேதி சனியின் வக்ர பெயர்ச்சி...ஆபத்தை சந்திக்கும் ராசிகள்...யோகம் பெறும் ராசிகள்..

First Published May 19, 2022, 8:00 AM IST

Sani Peyarchi 2022 Palangal: சனி பகவான் 2022 வரும் ஜூன் 05 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ரமாக மாறி பயணிக்கவுள்ளார். சனியின் இந்த பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை ஆரம்பமாகும், சில ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

shani

கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்தார்.  இதையடுத்து, சனி பகவான் மிக விரைவில் கும்ப ராசியில் வக்ரமாக மாறி பயணிக்கவுள்ளார். இந்த பயணமானது 23 அக்டோபர் 2022 வரை இருக்கும். இதனால்,எந்தெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

shani

கடகம்:

சனியின் வக்ர பெயர்ச்சி கடகம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. எதிலும், கவனமாக இருக்கவும். பணம் தொடர்பான எந்த முடிவையும் ஆலோசித்து எடுங்கள். இல்லையெனில், சேதம் ஏற்படலாம். சில வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும்.

shani 001

சிம்மம்: 

சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். இதன் காரணமாக உங்களுக்கு பிரச்சனைகள் ஆரம்பமாகும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நஷ்டம் ஏற்படும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.

VIRGO

கன்னி:

இந்த ராசிக்காரர்களுக்கும் சனியின் வக்ரம் பாக்கியம் கிடைக்கும். நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். தற்போதைய வேலையில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய வேலையை தொடங்கலாம். உங்களின் வருமானம் அதிகரிக்கும்.

Capricorn

மகரம்:

உங்கள் ராசிக்கு தொட்டது வெற்றி கிடைக்கும். நீங்கள் புதிய வேலையைத் தொடங்க நினைத்தால்,சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பிம்பம் வலுவாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி பிறக்கும்.  பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சனியின் இந்த பெயர்ச்சி வியாபாரிகளுக்கும் சாதகமாக இருக்கும்.

 மேலும் படிக்க ...Budhaditya yogam 2022: புதனுடன் கூட்டணி சேரும் சூரியன்...ஜூன் 3 வரை 'புத-ஆதித்ய' யோகம் பெறும் ராசிகள்...

click me!