Sevvai Peyarchi 2022: மேஷ ராசியில் செவ்வாய் பெயர்ச்சி... இந்த மூன்று ராசிகளுக்கு கஜகேசரி யோகம் உறுதி...

First Published Jun 13, 2022, 4:05 PM IST

Sevvai Peyarchi 2022 palangal: ஜூன் 27ம் தேதி செவ்வாய் கிரகம் ராசி மாறுகிறது. செவ்வாய் மேஷ ராசியில் நுழைவது அனைத்து ராசிகளையும் பாதிக்கும். செவ்வாயின் இந்த ராசி மாற்றம், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அப்படி யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளவும்.

Sevvai Peyarchi 2022

Sevvai Peyarchi 2022

 ஜோதிடத்தின் பார்வையில், செவ்வாய் கிரகம் ஆற்றல், தைரியம், நிலம், திருமணம் ஆகியவற்றின் காரணியாக விவரிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. வரும் ஜூன் 27ம் தேதி செவ்வாய் கிரகம் ராசி மாறுகிறது. செவ்வாய் மேஷ ராசியில் நுழைவது அனைத்து ராசிகளையும் பாதிக்கும். அதில், செவ்வாய் சஞ்சாரம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை தரும்.  அப்படி யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளவும்.

கடகம்: 

கடக ராசிக்காரர்களின் செவ்வாய் பெயர்ச்சி மிகவும் சத்தமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்பு உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பதவி உயர்வு - சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரம் விரிவடையும். புதிய சொத்து வாங்கலாம். பெரிய ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்படலாம்.  வணிக தொடர்பு அதிகரிக்கும். 

சிம்மம்: 

செவ்வாயின் ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷடமான காலமாக இருக்கும். பண வரவு அதிகம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் உதவியால் புதிய வாய்ப்புகள் வரும். அரசுத் துறையினர் ஆதாயம் கிடைக்கும். நீங்கள் ஒரு புதிய பயணத்தை மேற்கொள்ளலாம். உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.  போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.

மிதுனம்: 

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாயின் சஞ்சாரம் மிகவும் சாதகமாகும். இந்த நேரத்தில் உங்களின் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். உங்கள் வேலையில் முன்னேற்றம்  இருக்கும். திருமண காரியங்கள் கை கூடும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்துக்கிடந்த விஷயம் நிறைவேறும். வாழ்வில் புது ஒளி பிறக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். 

மேலும் படிக்க....Guru Peyarchi 2022: இன்னும் ஒரு வாரத்தில் குரு பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு கூரையை பிய்த்து பண மழை பொழியும்...

click me!