AK 61 Update: AK 61 படத்தில் அஜித் இதற்கெல்லாம் 'நோ' சொல்லி விட்டாரா..? அப்டேட் கேட்டு ஷாக்கான ரசிகர்கள்...

First Published May 15, 2022, 10:49 AM IST

AK 61 Update: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், தற்போது எச்.வினோத் இயக்கத்தில், ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். பூஜை போடப்பட்ட ‘அஜித் 61’ படபிடிப்புப் பணிகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.  

Ajith

போனி கபூர் தயாரிப்பில், வெளியாகும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அசுரன் படப்புகழ் மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் ஜான் கோக்கன், நடிகர் வீராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

Ajith

இந்த திரைப்படத்தில், அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இதில், இரட்டை கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்று வயதான கல்லூரி பேராசிரியராகவும், மற்றொன்று கதாபாத்திரம் செம ஸ்மார்ட்டான லுக்கில் இளமையாக இருக்குமாம். 
 

Ajith

இந்த படத்தின் சூட்டிங் மொத்தம் 75 நாட்கள் நடைபெறும் என்று படக்குழு வெளியிட்டுள்ளது. AK 61 படத்தின், படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட் வெளிவந்த வண்ணம் உள்ளது.

AK61

AK61 படத்திற்கு  'வீரா' என தலைப்பு வைத்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது மீண்டும் AK 61 படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

AK61

ஆம் அதன்படி, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்தில் பாடல்களை எல்லாம் படக்குழு தவிர்த்து விட்டார்களாம். மேலும் இந்த படத்தின் பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்த உள்ளதாகவும் தற்போது கூறப்படுகிறது. இதை கேட்டு அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். 

 மேலும் படிக்க...RRR Movie OTT: ஓடிடியில் மிரட்ட வரும் ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' படம்... ரிலீஸ் தேதி கேட்டு குஷியான ரசிகர்கள்...
 

click me!