உலகில் சிறந்த டாப் 3 பள்ளிகளில்.. இடம்பிடித்த 2 இந்திய பள்ளிகள் - என்னென்ன தெரியுமா?

First Published Jan 17, 2024, 8:25 AM IST

உலகின் முதல் 3 பள்ளிகள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 2 பள்ளிகள் இடம் பெற்றுள்ளது. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Top 3 Schools

உலகில் உள்ள எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தை சிறந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். வீட்டிற்குப் பிறகு, மாணவர்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை பள்ளியில் செலவிடுகிறார்கள். அவர்கள் எதிர்காலத்தில் எப்படி மாறுவார்கள் என்பது பள்ளியின் சூழலைப் பொறுத்தே அமைகிறது. இந்நிலையில் உலகின் தலைசிறந்த 3 கல்வி நிறுவனங்கள் பற்றி விவரங்கள் வெளியாகி உள்ளது.

Schools Of India

உலகின் சிறந்த பள்ளிகளுக்கான போட்டி இங்கிலாந்தில் நடந்தது. அதன்படி, கடந்த ஜூன் மாதம், உலகின் முதல் 10 பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவிலிருந்து 5 பள்ளிகள் இடம்பெற்றன. இப்போது 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த பள்ளி விருதை வென்ற மூன்று பள்ளிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சினேகலயா ஆங்கில வழிப் பள்ளி முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது.

Best Schools In India

இது மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் உள்ள ஒரு தொண்டு பள்ளி. இப்பாடசாலையானது துன்பங்களைச் சமாளிப்பதற்கான உலகின் சிறந்த பாடசாலைகளில் ஒன்றாகப் பெயரிடப்பட்டுள்ளது. எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பாலியல் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில் இந்தப் பள்ளியின் சிறப்பான பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

Best Schools

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ரிவர்சைடு பள்ளி என்ற சர்வதேச பள்ளியும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. புத்தாக்கத்திற்கான உலகின் சிறந்த பள்ளிகள் என்ற விருதில் இந்தப் பள்ளி இடம் பெற்றுள்ளது. சமூகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பள்ளிகளின் பங்களிப்பு, குறிப்பாக கோவிட் காலத்தில், அடுத்த தலைமுறையை வளர்ப்பதற்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அந்த ஷார்ட்லிஸ்ட்டில் இருந்து 'டாப் 3' தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

12 ஜிபி ரேம்.. 256 ஜிபி ஸ்டோரேஜ்.. 5,000mAh பேட்டரி.. ரூ.7000 தான் பட்ஜெட்.. எந்த ஸ்மார்ட்போன் தெரியுமா?

click me!