அனுமன் கோயிலுக்குச் சென்ற அரவிந்த் கெஜ்ரிவால்! டெல்லியில் இன்று பிரமாண்ட ரோடு ஷோ!

By SG Balan  |  First Published May 11, 2024, 1:19 PM IST

அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை தெற்கு டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். பிற்பகலில் ஆம் ஆத்மி அலுவலகத்தில் செய்தியாளர்களையும் சந்திக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.


இடைக்கால ஜாமீனில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தெற்கு டெல்லியில் மாபெரும் ரோடு ஷோ நடத்த இருக்கிறார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானும் அவருடன் பேரணியில் பங்கேற்க இருக்கிறார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. நேற்று இரவு திகார் சிறையில் இருந்து வெளியே வந்த அவரை மனைவி சுனிதா, மகள் ஹர்ஷிதா ஆகியோருடன் ஆம் ஆத்மி மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர்.

Tap to resize

Latest Videos

அப்போது பேசிய கெஜ்ரிவால், "சிறையில் இருந்து விரைவில் வெளியே வருவேன் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். கோடிக்கணக்கான மக்கள் தங்கள் ஆசியை எனக்கு வழங்கினார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. உச்ச நீதிமன்றத்துக்கும் நன்றி" என்றார்.

இந்தியாவில் இருந்து புதிய சாட்போட்! 98 மொழிகளில் பதில் சொல்லும் ஹனுமன் AI!

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை தெற்கு டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். பிற்பகலில் ஆம் ஆத்மி அலுவலகத்தில் செய்தியாளர்களையும் சந்திக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்ததை ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாமாக கொண்டாடினர். கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய சக்திவாய்ந்த சூரியப் புயல்; பவர் கிரிட்கள் செயலிழக்க வாய்ப்பு!

click me!