கோலிவுட்டில் கோலோச்சும் கேரளத்து பியூட்டி... நடிகை மாளவிகா மோகனனின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ

First Published Apr 16, 2024, 2:04 PM IST

தமிழில் பேட்ட, மாஸ்டர், தங்கலான் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனனின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Malavika mohanan

துல்கர் சல்மானின் பட்டம் போலே படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதையடுத்து இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்த அவர் தமிழில் முதன்முதலில் நடித்த படம் பேட்ட. முதல் படமே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்த மாளவிகாவுக்கு கோலிவுட்டில் அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் மாஸ்டர் திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா.

Malavika mohanan salary

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் டோலிவுட், பாலிவுட் என பிற மொழிகளில் இருந்து மாளவிகாவுக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. தற்போது இந்தியில் யுத்ரா, தெலுங்கில் ராஜா சாப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் மாளவிகா. ராஜா சாப் படத்தில் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார் மாளவிகா மோகனன். இப்படத்தின் மூலம் தெலுங்கில் அவர் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

இதையும் படியுங்கள்... விஜய், அஜித் மட்டும் மிஸ்ஸிங்... ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே கலந்துகொண்ட ஷங்கர் மகளின் Reception போட்டோஸ் இதோ

Malavika mohanan Movies

இதுதவிர தமிழில் தங்கலான் என்கிற தரமான படமொன்றில் நடித்து முடித்துள்ளார் மாளவிகா. இப்படத்தை பா,இரஞ்சித் இயக்கியுள்ளார். இதில் மாளவிகா உடன் சீயான் விக்ரம், பார்வதி, பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக உடல் எடையை குறைத்து மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் மாளவிகா.

Malavika mohanan Car Collection

இப்படி குறுகிய காலத்தில் கோலிவுட்டில் அசுர வளர்ச்சி அடைந்த மாளவிகா மோகனன் படத்துக்கு படம் தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்திக் கொண்டே செல்கிறார். தற்போது அவர் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளமாக வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இதுதவிர விளம்பரங்களின் மூலமும் அவருக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.

Malavika mohanan Net Worth

நடிகை மாளவிகா மோகனனின் சொத்து மதிப்பும் தற்போது உயர்ந்துள்ளது. அதன்படி அவரது சொத்து மதிப்பு ரூ.16 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. கார்கள் மீதும் அலாதி பிரியம் கொண்ட மாளவிகா ஏராளமான சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார். அதன்படி அவரிடம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ML 350, ரூ.81 லட்சம் மதிப்புள்ள ஆடி Q7 மற்றும் ரூ.2.6 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்... அக்காவின் வெட்டிங்கில் அதகளமாக டான்ஸ் ஆடி ரன்வீர் சிங்கை மெர்சலாக்கிய ஷங்கர் மகன் அர்ஜித் - வீடியோ இதோ

click me!