GOAT : கோட் பட போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள 2000ம் ஆண்டு பிப்ரவரி 16ந் தேதி இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கா?

First Published Apr 12, 2024, 8:41 AM IST

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின் சமீபத்திய போஸ்டரில் ஒளிந்திருக்கும் ஒரு ஆச்சர்ய தகவல் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

GOAT movie

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் கோட். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்க, மேலும் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி, லைலா, சினேகா, அஜ்மல், பார்வதி நாயர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.

GOAT movie poster

கோட் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒன்று இளம் வயது கதாபாத்திரம் என்பதால் அதற்காக டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி நடிகர் விஜய்யை இளமையாக காட்ட உள்ளனர். அதற்கான பணிகள் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ரஷ்யாவின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... மிரட்ட வரும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2.. ஆறு நிமிட காட்சிக்காக 60 கோடி செலவு செய்த படக்குழு - சுவாரசிய தகவல்!

goat Movie Vijay

கோட் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைய உள்ளதால், அப்படத்தின் ரிலீஸ் தேதியை ரம்ஜான் தினமான நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். அதன்படி கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி கோட் படத்தின் பிரத்யேக போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். அதில் குறிப்பிடப்பட்டு இருந்த ஒரு சுவாரஸ்ய தகவல் பற்றி தற்போது பார்க்கலாம்.

GOAT movie poster Decoding

பொதுவாக பெரிய நடிகர்களின் பட போஸ்டர்கள் வெளியானால் அதை டீக்கோட் செய்வதற்காக நெட்டிசன்கள் ஆவலோடு காத்திருப்பார்கள். அந்த வகையில் கோட் படத்தின் புதிய போஸ்டரில் 2000-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி என ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. உடனே அன்றைய தினம் என்ன நடந்தது என அலசி ஆராய்ந்த நெட்டிசன்கள், அந்த நாளில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு விமான விபத்து நடந்திருக்கிறது. இப்படத்திலும் விஜய் விமானியாக நடித்துள்ளதாக காட்டப்பட்டுள்ளதால் இரண்டையும் ஒப்பிட்டு இணையத்தில் பரப்பி வருகின்றனர். மறுபுறம் இது டைம் டிராவல் படம் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்... Paiyaa : சூப்பர் ஹிட்டான பையா.. 14 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் - லிங்குசாமியை கட்டியணைத்து பாராட்டிய தமன்னா!

click me!