GOAT movie : ரஜினியுடன் மோதல் இல்லை... சிங்கம் போல் சிங்கிளாக திரைக்கு வருகிறது கோட் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

First Published Apr 11, 2024, 1:32 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Vijay, Venkat Prabhu

தமிழ் திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். அவர் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். விஜய்யுடன் அவர் இணையும் முதலாவது படம் இதுவாகும். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்தி வருகின்றனர்.

GOAT Movie

கோட் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகை மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். இவர் இதற்கு முன்னர் தமிழில் விஜய் ஆண்டனியில் கொலை படத்தில் நடித்தவர் ஆவார். இதுதவிர நடிகைகள் சினேகா, லைலா, பார்வதி மேனன் ஆகியோரும், நடிகர்கள் நிதின் சத்யா, மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், பிரேம்ஜி, வைபவ், அஜ்மல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கோட் படத்தில் நடித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

இதையும் படியுங்கள்... Ugadi : களைகட்டிய யுகாதி.. நடிகை சுஜா வருணி வீட்டில் கூடிய செலிபிரிட்டிஸ் - அவரே வெளியிட்ட வண்ணமிகு போட்டோஸ்!

GOAT Vijay

கோட் திரைப்படத்தை ரஜினியின் வேட்டையன் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக பேச்சு அடிபட்ட நிலையில், அதையெல்லாம் தவிடுபொடி ஆக்கும் நிலையில், அப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது. அதன்படி கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

GOAT movie Release Date

விஜய் படம் ரிலீஸ் ஆவதால் விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் வேறு படங்கள் ரிலீஸ் ஆவது சந்தேகம் தான், அதனால் சிங்கிளாக பாக்ஸ் ஆபிஸில் கோட் படம் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் அக்டோபரில் ரஜினி நடிக்கும் வேட்டையன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் 2024-ம் ஆண்டின் இரண்டாம் பாதி பிரம்மாண்ட படங்களின் ராஜ்ஜியமாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... Thalapathy 69 : தயாரிப்பாளருடன் மோதல்... கைமாறியது தளபதி விஜய்யின் கடைசி படம் - அப்போ 250 கோடி போச்சா?

click me!