இக்கட ஷிவாண்ணா.. அக்கட பாலய்யா! பிற மாநிலங்களில் லியோவை பதம்பார்க்க காத்திருக்கும் பெரிய தலைகளின் படங்கள்

First Published Oct 18, 2023, 12:36 PM IST

நடிகர் விஜய் நடித்த லியோ முதல் ஷிவாண்ணா நடித்த கோஸ்ட் வரை இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

Shiva Rajkumar, Vijay, Balakrishna

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, அர்ஜுன், கவுதம் மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் லியோ. இப்படம் நாளை (அக்டோபர் 19) உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ்நாட்டில் இப்படத்துக்கு போட்டியாக எந்த படமும் ரிலீஸ் ஆகாததால் இங்குமட்டும் சுமார் 850-க்கும் மேற்பட்ட திரைகளில் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் மற்ற மொழிகளில் லியோவுக்கு போட்டியாக பல பிரம்மாண்ட படங்கள் காத்திருக்கின்றன. அதனை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தெலுங்கு

தெலுங்கில் லியோ படத்துக்கு போட்டியாக இரண்டு பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதில் ஒன்று பகவந்த் கேசரி. இப்படத்தில் தெலுங்கு திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் பாலய்யா நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 19-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் மற்றொரு திரைப்படம் டைகர் நாகேஸ்வர ராவ். வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தில் ரவி தேஜா ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படம் அக்டோபர் 20-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த இரண்டு படங்களுக்கு போட்டியாக தான் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் லியோ ரிலீஸ் ஆக உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கன்னடம்

கர்நாடகாவில் நடிகர் விஜய்க்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் அங்கும் லியோ திரைப்படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்துக்கு போட்டியாக கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டாராக விளங்கும் ஷிவ ராஜ்குமார், ஹீரோவாக நடித்த கோஸ்ட் திரைப்படமும் அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதனால் லியோ படம் கர்நாடகாவில் ஜெயிலர் படம் அளவுக்கு வசூலை வாரிக்குவிக்குமா என்பது சந்தேகமே. ஜெயிலர் படம் கர்நாடகாவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது.

இந்தி

இந்தியில் லியோ படத்துக்கு போட்டியாக கன்பாத் என்கிற பாலிவுட் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் டைகர் ஷெராஃப் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 20-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தால் இந்தியில் லியோ படத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்... தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்... லியோ படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என அறிவித்த ரோகிணி தியேட்டர்

click me!