கோடீஸ்வரியாக வாழும் புன்னகை அரசி சினேகாவுக்கு இத்தனை கோடி சொத்துக்கள் இருக்கிறதா? அவரின் Net Worth விவரம் இதோ

First Published Dec 19, 2023, 3:37 PM IST

தமிழ் திரையுலகில் புன்னகை அரசியாக வலம் வரும் நடிகை சினேகாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம். 

Sneha

ரசிகர்களால் புன்னகை அரசி என செல்லமாக அழைக்கப்படுபவர் சினேகா. இவரின் இயற்பெயர் சுஹாசினி, சினிமாவுக்காக தன் பெயரை சினேகா என மாற்றிக்கொண்டார். இவரை இயக்குனர் சுசி கணேசன் தான் தமிழில் அறிமுகப்படுத்தினார். அவர் இயக்கிய விரும்புகிறேன் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார் சினேகா. இப்படம் ரிலீஸ் ஆக தாமதம் ஆனதால் இவர் அடுத்ததாக மாதவனுக்கு ஜோடியாக நடித்த என்னவளே திரைப்படம் தான் சினேகாவின் அறிமுகப்படமாக அமைந்தது.

Sneha prasanna

நடிகை சினேகாவுக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ஆனந்தம். லிங்குசாமி இயக்கிய இப்படத்தில் அப்பாசுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சினேகா. இப்படத்தில் சினேகா ஆடிய பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடல் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. அப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் ரிப்பீட் மோடில் பார்க்கப்பட்ட பாடலாக இது இருந்தது. காரணம் அப்பாடலில் இடம்பெற்ற சினேகாவின் நடனம் மற்றும் அவரின் சிரிப்பு தான்.

Actress Sneha

இதையடுத்து கமலுடன் பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ், விஜய்க்கு ஜோடியாக வசீகரா, சூர்யாவுடன் உன்னை நினைத்து, அஜித்துக்கு ஜோடியாக ஜனா, சேரன் உடன் ஆட்டோகிராப், பிரிவோம் சந்திப்போம் என சினேகாவிற்கு முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததால் 2000 முதல் 2010 வரை சினேகாவின் ராஜ்ஜியமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் சிம்ரனுக்கு அடுத்தபடியாக டாப் ஹீரோயினாக வலம் வந்தார் சினேகா.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Sneha husband prasanna

நடிகை சினேகாவின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த வருடம் என்றால் அது 2009 தான். அந்த ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்கிற படத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சினேகா. இப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து மூன்று ஆண்டுகள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டது.

Sneha salary

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ள சினேகா, திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கு விஹான் என்கிற மகனும், ஆதியந்தா என்கிற மகளும் உள்ளனர். இந்த நிலையில், தற்போது 40 வயதை கடந்துவிட்ட போதிலும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் சினேகா. அவர் கைவசம் நடிகர் விஜய்யின் தளபதி 68 திரைப்படம் உள்ளது.

sneha net worth

இந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை சினேகாவுக்கு 45 முதல் 50 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் சினிமா மட்டுமின்றி ரியல் எஸ்டேட் பிசினஸிலும் முதலீடு செய்துள்ளாராம். இதுதவிர புதுவீடுகளுக்கு இண்டீரியர் வேலைகளை செய்யும் நிறுவனத்தையும் நடிகை சினேகா சொந்தமாக நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விளம்பரங்களில் நடிப்பதன் மூலமும் சினேகாவுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. இவர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.1 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... இமான் முதல் ஆதிக் வரை... விவாகரத்தான பெண்களை கரம்பிடித்த தமிழ் சினிமா பிரபலங்களின் பட்டியல் இதோ

click me!