ரூ.1,734 கோடிப்பே.. சினிமாவை மிஞ்சிய குடிமகன்கள்.. கடந்த ஆண்டை விட அதிகரித்த டாஸ்மாக் வருமானம்..

First Published Jun 21, 2024, 8:07 PM IST

ஆயத்தீர்வை துறைக்கு கீழ் இருக்கக்கூடிய டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக தமிழக அரசுக்கு கிடைத்திருக்க கூடிய வருவாய் தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

Tasmac Liquor Revenue

சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்றுமதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் மாலை நடைபெற்றது. இதன் மூலமாக ஆயத்தீர்வை துறைக்கு கீழ் இருக்கக்கூடிய டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக தமிழக அரசுக்கு கிடைத்திருக்க கூடிய வருவாய் தொடர்பான பட்டியல் தற்போது கிடைத்திருக்கிறது.

Tasmac

அதன்படி, கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும் 2023- 24 நிதி ஆண்டில் டாஸ்மாக் மூலம் 1734 கோடியே 54 லட்சம் ரூபாய் அதிகமாக மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Govt

கடந்த நிதியாண்டில் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி என 8 நாட்கள் தவிர இதர நாட்களில் இயங்கியதன் மூலம் 45 ஆயிரத்து 855 கோடியே 67 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kallakurichi Issue

கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில் 44 ஆயிரத்து 121 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கு மது விற்கப்பட்ட நிலையில், கடந்த நிதி ஆண்டை விட இந்த ஆண்டு ஆயிரத்து 734 கோடியே 54 லட்சம் ரூபாய் அளவுக்கு கூடுதலாக மது விற்கப்பட்டுள்ளதாக கொள்ளை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

உங்கள் பட்ஜெட் ரூ.15 ஆயிரம் ரூபாய் தானா.. பட்ஜெட்டிற்குள் அடங்கும் தரமான 5 ஸ்மார்ட்போன்கள்..

Latest Videos

click me!