சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா இணையும் முதல் பாலிவுட் படம்.. ரிலீஸ் தேதியுடன் வந்த அசத்தல் அறிவிப்பு

First Published Feb 13, 2024, 1:03 PM IST

சூர்யா - ஜோதிகா தயாரிப்பில் இந்தியில் ரீமேக் ஆகி இருக்கும் சூரரைப்போற்று திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டைட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Suriya, Jyothika

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் சூரரைப் போற்று. கடந்த 2020-ம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆன இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். இப்படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் உள்பட ஐந்து பிரிவுகளில் தேசிய விருதும் கிடைத்தது.

soorarai pottru hindi remake

சூரரைப் போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக அறிவித்தனர். நடிகர் சூர்யாவே இப்படத்தை இந்தியில் தயாரிக்க முடிவெடுத்தார். அதன்படி 2டி நிறுவனம் மூலம் சூர்யாவும், ஜோதிகாவும் தயாரித்துள்ள சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பொம்மி கதாபாத்திரத்தில் ராதிகா மதன் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... விருதுகளை தட்டித்தூக்கிய சூரரைப் போற்று... பிலிம்ஃபேரில் கெத்து காட்டிய சூர்யா படங்கள் - யார் யாருக்கு விருது?

akshay kumar suriya

தமிழில் இப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா தான் அதன் இந்தி வெர்ஷனையும் இயக்கி உள்ளார். இதில் கூடுதல் ஸ்பெஷலாக இப்படத்தில் நடிகர் சூர்யாவும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும், இப்படத்தை திரைக்கு கொண்டுவராமல் இருந்தனர். இந்த நிலையில், ஒருவழியாக அப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

sarfira Release Date

அதன்படி இப்படம் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு சர்பிரா என பெயரிட்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்து உள்ளார். இப்படம் தமிழில் பல்வேறு விருதுகளை வென்று சாதித்ததை போல் இந்தியிலும் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... ஜோவின் முடிவு எப்பவுமே ஜோராக இருக்கும்... காதல் மனைவி குறித்து சூர்யா நெகிழ்ச்சி

click me!