ஒருமுறை தற்கொலை செய்து கொள்ள நினைத்த ரஜினிகாந்த்.. அவரின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் எது தெரியுமா?

First Published May 10, 2024, 10:01 AM IST

ரஜினிகாந்த் ஒருமுறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் ஒருவர். இவருக்கும் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ரஜினியின் படம் இப்போதும் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போது 71 வயதை கடந்திருந்தாலும் ரஜினி இன்று அதே துடிப்பு, ஸ்டைலுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் பாக்ஸ் ஆபிஸ் கிங், ரெக்கார்டு மேக்கராகவும் ரஜினி இருக்கிறார். எனவே புதிய சாதனைகளை படைப்பதோ அல்லது ஏற்கனவே உள்ள சாதனைகளை முறியடிப்பதோ நடிகர் ரஜினிக்கும் ஒன்றும் புதிதல்ல. இதன் காரணமாகவே ரஜினிகாந்திற்கு அதிக சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் முன் வருகின்றனர். தற்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் மாறி உள்ளார்

இருப்பினும், ரஜினிகாந்த் ஒருமுறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மை தான்.. தனது போராட்டங்கள் மற்றும் பயணம் பற்றி ரஜினிகாந்த் ஒருமுறை வெளிப்படையாக பேசினார், பேருந்து நடத்துனராக இருந்து நடிகராக மாறியதை அப்போது அவர் விவரித்தார்..

1992-ம் ஆண்டு சிங்கப்பூரில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் நடத்திய இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், கண்டக்டராக இருந்த வாழ்க்கையைப் பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

தனது குடும்பத்தின் வறுமை காரணமாக ஆபிஸ் பாய், கூலி, கார்பெண்டர் என வேலைகளை செய்ததாக ரஜினிகாந்த் அப்போது கூறினார். வறுமையை நேரில் அனுபவித்ததால், அதை பற்றி தனக்கு தெரியும் என்று கூறினார்.

எனினும் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையும், கனவும் தனக்கு இருந்ததாகவும் ரஜினிகாந்த் ஒப்புகொண்டார். தனது இளமை பருவத்தில் கூட தனது வாழ்க்கையில் எதற்கும் பயப்படவில்லை என்று கூறினார். இருப்பினும், ஒரு நேரத்தில் மிகவும் பயந்து தற்கொலை செய்ய முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார். எனினும் ஒரு தெய்வீக மனிதனுக்கு சிலர் பூஜை செய்வது போன்ற ஓவியம் தனது வாழ்க்கையை மாற்றியது என்றும் அதைப் பார்த்ததும் தன் முடிவை இன்னொரு நாளைக்கு தள்ளிப்போட முடிவு செய்ததாகவும் ரஜினி கூறினார்..

தொடர்ந்து பேசிய அவர் “ நான் தற்கொலை செய்து கொள்ள நினைத்த அன்றைய தினம் எனக்கு ஒரு கனவு வந்தது. எனது கனவில் ஒரு வெள்ளை தாடியுடன் சித்தரிக்கப்பட்ட ஓவியத்திலிருந்து துறவி, ஆற்றின் குறுக்கே தோன்றி, என்னை அருகில் வரும்படி சைகை செய்தார், நீச்சல் அடிக்காமல் ரஜினிகாந்த் அவரை நோக்கி ஓடினார்.

அடுத்த நாள், நான் அந்த தெய்வத்தைப் பற்றி விசாரித்தேன், அது ஸ்ரீ ராகவேந்திரர் என்று தெரிந்து கொண்டேன். பின்னர் அவர் மடத்திற்கு சென்று, பணக்காரர் ஆக வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தி, உருக்கமாக பிரார்த்தனை செய்தேன்.. வியாழன்தோறும் விரதம் இருக்கத் தொடங்கினே.

பின்னர், நான் ஒரு கண்டக்டராக பண்புரிந்தேன். பிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்தேன். பின்னர் பாலச்சந்தர் சார் என்னை கண்டுபிடித்தார்., இறுதியில் நட்சத்திரமாக உயர்ந்தார். ரஜினிகாந்த் இந்தக் கதையை முதன்முறையாக பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.. 

1978 ஆம் ஆண்டு நடிகராக மாறிய மந்த்ராலயத்திற்குச் சென்றதையும் ரஜினிகாந்த் நினைவு கூர்ந்தார், அங்கு அவர் தனது கனவில் இருந்து அதே நதியையும் இடத்தையும் பார்த்தாராம். அந்த இடத்தை அவர் இதுவரை பார்த்ததில்லை, அது அவருக்கு மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியதாம். 

ஒரு கண்டக்டரை சூப்பர் ஸ்டாராக மாற்றியதிலும், தனது வெற்றியிலும் தமிழக மக்கள் கணிசமான பங்கு வகித்துள்ளனர் என்பதை தான் நம்புவதாகவும் ரஜினி கூறினார். ஸ்ரீ ராகவேந்தருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ரஜினிகாந்த் 1984ல் 'ஸ்ரீ ராகவேந்திரர்' படத்தில் நடித்தார். அவரது 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!