குளிர்காலத்தில் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க..

First Published Jan 15, 2024, 2:48 PM IST

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிக்க வேண்டும் என்பது பற்றிய தகவல்கள் இதோ...

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்: குளிர்காலத்தில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது பெரிய சவாலாக உள்ளது. ஏனெனில் வானிலையில் மாற்றம் ஏற்படும் போது,   உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து, அதன் காரணமாக விரைவில் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இக்கட்டுரையில் குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவுப் பொருட்களை கொடுக்க வேண்டும் என்பது பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்..

நெய்: நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால், குளிர்காலத்தில் குழந்தைகளை தாக்கும் நோய்த்தொற்றுகள் மற்றும் பிற சிறிய உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்கிறது.

மஞ்சள் பால்: ஒரு டம்ளர் இளஞ்சூடான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சளுடன் கலந்து குழந்தைகள் தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் குடித்து வந்தால், உடலை உள்ளிருந்து சூடுபடுத்துவதுடன், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும்.

சிட்ரஸ் பழங்கள்: நாம் அனைவரும் அறிந்தபடி, சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு இதுபோன்ற பழங்களை சாப்பிட கொடுத்தால், அது அவர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை படிப்படியாக அதிகரிக்க உதவுகிறது. உதாரணமாக ஆரஞ்சு, தர்பூசணி, ஸ்ட்ராபெரி போன்றவை.

பச்சை இலை காய்கறிகள்: குளிர்காலத்தில் பச்சைக் காய்கறிகளை குழந்தைகளின் உணவில் சேர்த்து வந்தால், அவர்களின் உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

இதையும் படிங்க:  பெற்றோர்களே! குழந்தைக்கு கொடுக்கும் பாலுடன் இவற்றை ஒருபோதும் சேர்த்து கொடுக்காதீங்க!!

புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள்: குழந்தைகளின் குளிர்கால உணவில் புரதச்சத்து நிறைந்த உணவுகளான பருப்பு வகைகள், அவித்த முட்டைகள் ஒரு நாள், கோழிக்கறி வாரம் ஒருமுறை, பனீர், பால் பொருட்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  குளிர்காலத்தில் பிறந்த குழந்தைக்கு  எண்ணெய் மசாஜ் செய்யலாமா..?  அதன் நன்மைகள் என்ன..??

நட்ஸ்கள்: நட்ஸ்களில் காணப்படும் ஆரோக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஜலதோஷத்தை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக, ஊறவைத்த பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்றவை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!