Gabriella Sellus : சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா தொடங்கிய புது பிசினஸுக்கு கிடைக்கும் செம்ம ரெஸ்பான்ஸ்..!

First Published May 5, 2024, 12:58 PM IST

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமான நடிகை கேப்ரியல்லா செல்லஸ் புது பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

gabriella Sellus

சீரியல் என்றாலே சன் டிவி என சொல்லும் அளவுக்கும் விறுவிறுப்பான திரைக்கதைகளுடன் பல்வேறு மெகா தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதன்காரணமாக சன் டிவி சீரியல்கள் தான் டிஆர்பி-யில் பட்டைய கிளப்பி வருகின்றன. 

serial actress gabriella Sellus

குறிப்பாக சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சல், கயல், சுந்தரி, இனியா, வானத்தைப் போல போன்ற மெகா தொடர்கள் தொடர்ச்சியாக டிஆர்பி-யில் முன்னிலை வகித்து வருகின்றன. இதுதவிர புது சீரியல்களும் விரைவில் களமிறங்குகின்றன.

sundari serial actress gabriella Sellus

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சில தொடர்கள் அண்மையில் முடிவுக்கு வந்த நிலையில், அதற்கு பதிலாக ஆறு மெகா தொடர்களை புதிதாக களமிறக்குகிறது சன் டிவி. 

gabriella Sellus photos

இப்படி அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மட்டுமின்றி அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் தான் கேப்ரியல்லா செல்லஸ்.

இதையும் படியுங்கள்... நல்ல வேள அவர் நடிக்கல... கில்லி படத்தில் பிரகாஷ் ராஜுக்கு பதில் நடிக்க இருந்தது இந்த டாப் ஹீரோவின் தந்தையா?

gabriella Sellus instagram

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கிராமத்துப் பெண்ணாக நடித்து அசத்திய கேப்ரியல்லா, அதன் முதல் சீசனில் தான் படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்கிற லட்சியத்துடன் இருப்பார். 

gabriella Sellus new business

சுந்தரி சீரியலின் முதல் பாகம் முடிந்த கையோடு, அதன் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதில் கலெக்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கேப்ரியல்லா செல்லஸ். இந்த சீரியலும் டிஆர்பியில் பட்டைய கிளப்பி வருகிறது.

gabriella Sellus acting school

சீரியல் தவிர சினிமாவிலும் நயன்தாராவின் ஐரா, லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்துள்ள கேப்ரியல்லா தற்போது புது பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் ‘கேபி தியேட்டர் ஃபேக்டரி’ என்கிற நடிப்பு பள்ளியை தொடங்கி இருக்கும் கேப்ரியல்லா, அதன்மூலம் ஒர்க்‌ஷாப் நடத்தி, பலருக்கு நடிப்பு பயிற்சி அளித்து வருகிறார். 

gabriella Sellus gaby theatre factory

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், ரசித்த கலையை பகிர்வதில் மகிழ்ச்சி என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்...  முதல் நாளை விட டபுள் மடங்கு வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் அரண்மனை 4 - 2 நாளில் இம்புட்டு கலெக்‌ஷனா?

click me!