Summer Tips : நெஞ்செரிச்சல் இருக்கா..? அப்ப கோடையில் 'இந்த' உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க..!

First Published Apr 15, 2024, 1:01 PM IST

கோடையில் நெஞ்செரிச்சல் இரண்டு மடங்கு அதிகரிப்பதால், இந்த பிரச்சினை உள்ளவர்கள் கோடையில் என்னென்ன உணவுகளை சாப்பிட கூடாது என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

நெஞ்செரிச்சல் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். பொதுவாகவே இது உணவு சாப்பிட்ட பிறகு தான் வரும். அதுவே, கோடை காலத்தில் இது வந்தால், இதன் தீவிரம் இரண்டு மடங்காக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்குக் காரணம் நாம் சாப்பிடும் உணவுகள் தான். எனவே, நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் கோடையில் என்னென்ன உணவுகளை சாப்பிட கூடாது என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

ஃப்ரெஞ்ச் ஃப்ரை: பொதுவாகவே, உருளைக்கிழங்கை எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் கோடையில், வறுத்த அல்லது பொரித்த உருளைக்கிழங்கு சாப்பிட கூடாது. குறிப்பாக ஃப்ரெஞ்ச் ப்ரை சாப்பிடவே கூடாது. காரணம் அதில் இருக்கும் காரம், எண்ணெய் நெஞ்செரிச்சலை மேலும் தூண்டும். 

ஐஸ்க்ரீம்: ஐஸ்க்ரீம் கோடைக்கு ஏற்றது என்றாலும், நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் இதை கோடையில் சாப்பிட கூடாது. காரணம் இதில் பால் மற்றும் கொழுப்பு அதிகமாகவே உள்ளது. இவை நெஞ்செரிச்சலை தீவிரம் அடைய செய்யும்.

கார்பனேட் பானங்கள்: நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் கோடையில் கார்பனேட் பானங்களை குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இது வயிற்றில் இருக்கும் அமிலத்தை தொண்டைக்குள் குமிழியாக செய்து மோசமான எரியும் உணர்வை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க:  தீராத நெஞ்சு எரிச்சல்.. உடனே தீர்க்க உதவும் 4 எளிய வீட்டு வைத்தியம் இதோ..!!

எலுமிச்சை ஜூஸ்: கோடைக்கு எலுமிச்சை ஜூஸ் குடித்தால், உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்..ஆனால் நெஞ்செரிச்சல் பிரச்சனை உள்ளவர்கள் இதை குடிக்க வேண்டாம். காரணம், சிட்ரஸ் பழங்கள் அதன் அமிலத்தன்மை காரணமாக நெஞ்செரிச்சலை மேலும் தூண்டும். இதற்கு பதிலாக நீங்கள், முலாம்பழம், தர்பூசணி, பேரிக்காய் போன்ற சிட்ரஸ் அல்லாத பழங்களின் ஜூஸ் குடிக்கலாம்.

இதையும் படிங்க: நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் கவனக்குறைவா இருக்காதீங்க.. இந்த 4 சந்தர்ப்பங்களில் வந்தால் ஆபத்து..

தக்காளி: இது கோடைக்கு ஏற்றது அல்ல. நெஞ்செரிச்சலை தூண்டும் சிட்ரிக் மற்றும் மாலிக் என இரண்டு அமிலங்கள் இதில் உள்ளது. எனவே, கோடையில் இதை உணவில் அதிகம் சேர்த்தாலும் கூட கடுமையான நெஞ்செரிச்சல் ஏற்படும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!