சப்பாத்தியை கேஸ் தீயில் சுட்டு சாப்பிடுறீங்களா..? அப்ப இந்த விஷயங்களை உடனே தெரிஞ்சுக்கோங்க!

First Published Feb 21, 2024, 4:12 PM IST

சப்பாத்தியை நேரடியாக கேஸ் தீயில் சுடுவது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா..?
 

இந்தியர்களின் பிரதான உணவாக அரிசி மற்றும் சப்பாத்தி முக்கிய பகுதியாகும். அதே நேரத்தில், சிலர் சப்பாத்தியை வெவ்வேறு வழிகளில் சமைப்பார்கள். ஒருவர் அதை பேனில் சமைப்பார்கள் மற்றவர்களோ அதை நேரடியாக கேஸ் தீயில் சமைக்க விரும்புகிறார்கள்.

இது சப்பாத்தி விரைவாகவும், பஞ்சு போன்றதாகவும் மாற்றுகிறது மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. ஆனால், உங்களுடைய இந்த பழக்கம் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் தெரியுமா..? என்ன ஆபத்து என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..

ஆய்வு ஒன்றில், கேஸ் அடுப்புகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான காற்று மாசுபாடுகளை வெளியிடுகின்றன. மேலும், இந்த மாசுபடுத்திகள்  கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை சுவாச மற்றும் விதியை நோயாளிகளின் அபாயத்தை ஏற்படுத்திக்கின்றன அதுமட்டுமின்றி புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
 

chapathi

மற்றொரு ஆய்வின்படி, அதிக தீயில் வைத்து சப்பாத்தி சுடுவது உடல் உறுப்புகளுக்கு நல்லதல்ல. மேலும் அவை, புற்றுநோயை உருவாக்கும்.
 

அதுபோல் கோதுமை மாவில் ஒரு குறிப்பிட்ட அளவு இயற்கையாகவே சர்க்கரை மற்றும் புரதம் உள்ளது. எனவே, அதை நேரடியாக அடுப்பில் சூடு படுத்தினால் மனித உடலுக்கு பாதுகாப்பானது அல்ல, புற்றுநோய் உண்டாக்கும் செல்களை உருவாக்கலாம்.
 


ஆகவே, கேஸ் தீயில் சுட்ட சப்பாத்தியை உண்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, ஆரோக்கியத்தை மனதில் வைத்து கொண்டு இது போன்ற தவறை இனி செய்யாமல் இருப்பது நல்லது.

click me!