Janhvi Kapoor : முதல்வரின் பேரனுடன் காதல்... நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருக்கு விரைவில் திருமணம்?

First Published Apr 12, 2024, 2:07 PM IST

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தன்னுடைய காதலனை விரைவில் கரம்பிடிக்க உள்ளதாகவும் அவரின் திருமணம் திருப்பதியில் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

1980களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வந்தவர் தான் ஸ்ரீதேவி. அந்த காலத்து லேடி சூப்பர்ஸ்டார் ஆகவும் அவர் திகழ்ந்து வந்தார். சினிமாவில் உச்சத்தில் இருந்த ஸ்ரீதேவி இந்தி பட தயாரிப்பாளர் போனி கபூர் உடன் காதல் வயப்பட்டு அவரை கடந்த 1996-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீதேவி. இந்த ஜோடிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர்.

நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018-ம் ஆண்டு மரணமடைந்ததை அடுத்து அவரது மகள் ஜான்வி கபூர் அதே ஆண்டு சினிமாவில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார். தடாக் என்கிற படம் மூலம் அறிமுகமான ஜான்வி கபூர், அடுத்தடுத்து இந்தியில், கோஸ்ட் ஸ்டோரீஸ், ரூஹி, குட்லக் ஜெர்ரி, மிலி, பவால் போன்ற திரைப்படங்களில் நடித்தார். ஆனால் இந்தியில் அவருக்கு பெரியளவில் வெற்றிகிடைக்காததால் தற்போது டோலிவுட் பக்கம் ஒதுங்கி உள்ளார் ஜான்வி கபூர்.

இதையும் படியுங்கள்... Pradeep Ranganathan Salary: இரண்டே படத்தில்... 10 மடங்கு சம்பளத்தை உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்!

டோலிவுட்டில் அவருக்கு அடுத்தடுத்து ஜாக்பாட் பட வாய்ப்புகள் குவிந்துள்ளன. அதன்படி தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் தேவரா படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஜான்வி கபூர். இப்படம் மூலம் அவர் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே மற்றுமொரு பிரம்மாண்ட படவாய்ப்பை தட்டிதூக்கி இருக்கிறார் ஜான்வி. அதுதான் ராம்சரணின் ஆர்சி 16. அடுத்ததாக தமிழிலும் அவர் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி பிசியான ஹீரோயினாக வலம் வரும் ஜான்வி கபூர், ஷிகர் பஹாரியா என்பவரை காதலித்து வருகிறார். ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி, தங்கள் காதல் விவகாரம் வெளியில் லீக் ஆனதும் ஜோடியாக சுற்றி வருகின்றனர். ஷிகர் பஹாரியா, மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சுசில் குமார் ஷிண்டேவின் பேரன் ஆவார். இந்த ஜோடியின் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் திருப்பதி கோவிலில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... Simbu : சிம்புவிற்கு சொன்ன கதையில் பிரதீப் ரங்கநாதன்? பரவிய தகவல் உண்மையா? போட்டு உடைத்த இயக்குனர் அஸ்வத்!

click me!