ஸ்ரீதேவி முதல்... அமலா பால் வரை! திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான முன்னணி தமிழ் நடிகைகள் இத்தனை பேரா?

First Published Apr 13, 2024, 6:10 PM IST

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி, பின்னர் தங்களுடைய காதலரை கரம் பிடித்த சில தமிழ் பட நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

தென்னிந்திய திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோயினாக மாறியவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக மாறிய பின்னர்.. பாலிவுட் திரையுலகின் பக்கம் சென்ற நடிகை ஸ்ரீதேவிக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. பாலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என பெயரெடுத்த ஸ்ரீதேவி, பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து... திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். போனி கபூரை ஸ்ரீதேவி திருமணம் செய்து கொண்ட போது அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

சரிகா (Sariha): 

உலக நாயகன் கமல்ஹாசனை உருகி உருகி காதலித்தது திருமணம் செய்து கொண்டவர் மும்பையை சேர்ந்த நடிகை சரிகா. ஏற்கனவே கமலஹாசனுக்கு வாணி கணபதி என்பவருடன் திருமணம் நடந்த விஷயம் தெரிந்தும், கமல்ஹாசனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த சரிகா, கர்ப்பம் ஆன பின்னரே கமல்ஹாசனை திருமணம் செய்து கொண்டார். 

Goat First Single: தளபதி விஜய்யின் 'GOAT' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

எமி ஜாக்சன் (Amy Jackson):

தமிழில் மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, பின்னர் ஐ, வேலையில்லா பட்டதாரி, 2.0, தெறி, போன்ற பல படங்களில் நடித்தவர் எமி.  இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஜார்ஜ் பனாயுடுவுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில், திடீர் என கர்ப்பமானார். குழந்தை பிறந்த பின்னர் இருவரும் நிச்சயதார்த்தம் மட்டுமே செய்து கொண்ட நிலையில், திருமணத்திற்கு முன்பே இருவரும் பிரிந்தனர்.
 

நடிகை இலியானா (Ileana):

தமிழில் 'கேடி' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, பின்னர் பல தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானார் இலியானா. தமிழில் கடைசியாக தளபதி விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்த இவர், பின்னர் பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்தினார். இவர்  தன்னுடைய காதலனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார். இவருக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்த நிலையில், கர்ப்பமான பின்னர் திருமணம் செய்த தகவலை உறுதி செய்தார்.

Meena: எனக்கு மீனா தான் வேண்டும்! அடம்பிடித்த 63 வயது நடிகரை அசிங்கப்படுத்தினாரா கண்ணழகி? கொதிக்கும் ரசிகர்கள்

Amala Paul

அமலாபால் (Amala Paul):

ஏற்கனவே இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற நடிகை அமலாபால், கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு முன்பே இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்த தகவல் பின்னரே தெரியவந்தது.

ஆலியா பட் (Alia Bhatt):

பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் ஆன 2 மாதத்திலேயே நான்கு மாதம் கர்ப்பமாக இருந்த தகவலை வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான பின்னரே ஆலியா பட் கர்ப்பமாக இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு தெரியவந்தது.

கிழக்கு வாசல் சீரியலில் இருந்து நான் விலகவில்லை! இப்படி ஆகிடுச்சு.. ரசிகர்களை பதற வைத்த ரேஷ்மா முரளிதரன்!

click me!