Trisha : “விஜய் கிட்ட அந்த ஒரு விஷயம் மட்டும் எனக்கு பிடிக்காது.. இரிட்டேட் ஆகும்” த்ரிஷா ஓபன் டாக்..

First Published May 4, 2024, 11:05 AM IST

விஜய் பற்றி த்ரிஷா பேசிய பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக நடிக்கும் ஒரே நடிகை என்றால் அது த்ரிஷா தான். 2000-களின் தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். தென்னிந்திய குயின் என்று அழைக்கப்படும் த்ரிஷா, மௌனம் பேசியதே தொடங்கி சமீபத்தில் வெளியான லியோ வரை ஹீயோனாக கலக்கி வருகிறார்.

Trisha

சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற லியோ படத்தில் விஜய்யின் மனைவியாக த்ரிஷா நடித்திருந்தார். ஏற்கனவே கில்லி, திருப்பாச்சி, குருவி பல படங்களில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா, கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். கோலிவுட்டில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடிகளில் விஜய் - த்ரிஷா ஜோடியும் ஒன்று.

இந்த நிலையில் த்ரிஷா இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் த்ரிஷாவின் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அனுஹாசனின் பிரபல நிகழ்ச்சியான காஃபி வித் அனு நிகழ்ச்சியில் விஜய் மற்றும் த்ரிஷா கலந்து கொண்டனர்.

அப்போது விஜய் குறித்து ஏதேனும் சுவராஸ்யமான விஷயத்தை கூறுங்கள் என்று அனுஹாசன் த்ரிஷாவிடம் கேள்வி எழுப்புவார். அதற்கு பதிலளித்த த்ரிஷா , “ஷூட்டிங் ஸ்பாட்டில், அனைவரும் வேடிக்கையாக இருக்கும்போது, ​​அவர் சென்று ஒரு மூலையில் அமர்ந்து மணிக்கணக்கில் சுவரைப் பார்த்துக் கொண்டிருப்பார். அவர் எப்போதும் அமைதியாக இருப்பார், படப்பிடிப்பில் அதிகம் பேசமாட்டார். அப்போது குறுக்கிடும் விஜய் “ நான் அந்த சீனை பற்றி யோசித்துக் கொண்டிருப்பேன். இவங்க எல்லாரும் அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள். ஆனா நான் அடுத்த ஷாட் என்ன, அடுத்த சீன் என்ன என்று யோசித்துக் கொண்டிருப்பேன்.” என்று கூறுகிறார்.

பின்னர், ரேபிட்-ஃபயர் ரவுண்டின் போது, த்ரிஷாவிடம் விஜய்யிடம் பிடிக்காத விஷயம் என்ன, எதை அவர் மாற்ற வேண்டும் என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு பதிலளித்த த்ரிஷா “ விஜய்யின் அமைதி. அவர் அப்படிப்பட்டவர் என்பது எனக்குப் புரிகிறது, ஆனால் சில சமயங்களில் அவரிடம் எளிதில் பேச முடியாது.  அவர் இன்னும் கொஞ்சம் அணுகக்கூடியவராக இருக்க வேண்டும். பதிலுக்கு, விஜய்... த்ரிஷாவை அமைதியாக பார்த்தார்.

அதே போல் திரையில் பார்க்கும் போது விஜய்க்கு சிறந்த ஜோடி யார் என்ற கேள்வி கேட்கப்படுகிறது, விஜய்-அசின், விஜய்-நயன்தாரா, விஜய்-த்ரிஷா ஆகியோரில் சிறந்த ஜோடியைத் தேர்வு செய்யும்படி கேட்டபோது, ‘விஜய், பலர் என்னிடம் கூறியிருக்கின்றனர். விஜய் - த்ரிஷா ஜோடி தான் சிறந்த ஜோடி என்று அது உண்மை என்று நான் நினைக்கிறேன்."  என்று தெரிவித்தார். அதற்கு பதில் சொன்ன த்ரிஷா , "அவர் பாதுகாப்பான பதிலைத் கூறியுள்ளார்" என்று குறிப்பிட்டார்.

அரசியல் கட்சி தொடங்கி உள்ள விஜய், இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று கூறி உள்ளார். தற்போது கோட் பட படப்பிடிப்பில் விஜய் பிசியாக இருக்கிறார். இந்த படத்தை தவிர இன்னும் ஒரே ஒரு படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

மறுபுறம், அஜித்தின் விடாமுயற்சி, சிரஞ்சீவியின் விஸ்வம்பரா மற்றும் கமல்ஹாசனின் தக்லைஃப் உட்பட பல பெரிய படங்களில் த்ரிஷா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!