Thalapathy 69 : தயாரிப்பாளருடன் மோதல்... கைமாறியது தளபதி விஜய்யின் கடைசி படம் - அப்போ 250 கோடி போச்சா?

First Published Apr 11, 2024, 12:07 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 69 படத்தில் இருந்து தயாரிப்பு நிறுவனம் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Vijay

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. கோட் படத்தில் நடித்து முடித்த கையோடு, நடிகர் விஜய் தன்னுடைய அடுத்த பட பணிகளை தொடங்க உள்ளார். அதுதான் அவரின் கடைசி படம் என உறுதியாகி உள்ளதால், தளபதி 69 படம் மீதான எதிர்பார்ப்பும் தற்போதே எகிறிய வண்ணம் உள்ளது.

H vinoth, vijay

இதனிடையே, அப்படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி தூக்க பல்வேறு முன்னணி இயக்குனர்கள் போட்டிபோட்ட நிலையில், அந்த வாய்ப்பு இறுதியாக இயக்குனர் ஹெச்.வினோத்துக்கு கிடைத்துள்ளது. விஜய்யை வைத்து ஒரு அரசியல் படம் தான் இயக்குவேன் என அவர் ஏற்கனவே பல பேட்டிகளில் கூறி இருந்ததால், தளபதி 69 பக்கா அரசியல் படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தை ஆர்.ஆர்.ஆர் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை தயாரித்த டிவிவி தனய்யா தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்... Archana Love: பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் லவ்வர் இந்த சீரியல் ஹீரோவா? காட்டுத்தீ போல் பரவும் போட்டோ

vijay last movie

இருப்பினும் அதுபற்றி எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தற்போது தளபதி 69 படத்தில் இருந்து டிவிவி நிறுவனம் விலகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்னரே அதன் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை விற்க அந்நிறுவனம் முயற்சி செய்ததாகவும், இது நடிகர் விஜய்க்கு சுத்தமாக புடிக்காததால், அவர் அந்நிறுவனத்திற்கு நோ சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

Thalapathy 69

டிவிவி நிறுவனம் விலகி உள்ளதால் அவர்களுக்கு பதில் தளபதி 69 படத்தை தயாரிக்கும் வாய்ப்பை தட்டிதூக்க சன் பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் நிறுவனம், ஏஜிஎஸ் நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறதாம். டிவிவி நிறுவனம் விஜய்க்கு ரூ.250 கோடி சம்பளம் தர முன்வந்திருந்தது. தற்போது அந்நிறுவனம் விலகி இருப்பதால் அதே சம்பளத்தை மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் தருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதையும் படியுங்கள்... சம்பளத்தை 10 மடங்கு உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்.. அடுத்த படத்தின் சம்பளம் இத்தனை கோடியா?

click me!