GOAT movie : தளபதி விஜய்யின் கோட் படத்தில் ‘தல’யும் நடிக்கிறாரா? வெங்கட் பிரபுவின் மாஸ் சம்பவம் லோடிங்

First Published Mar 28, 2024, 9:21 AM IST

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து வரும் கோட் திரைப்படத்தில் தலயும் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படம் கோட், வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். மேலும் லைலா, பிரபுதேவா, சினேகா, பிரசாந்த், மைக் மோகன், அஜ்மல், வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி, பார்வதி மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கோட் படத்தில் நடித்து வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கோட் படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று இளம் வயது கதாபாத்திரம். அதற்காக மீசையை எடுத்து கிளீன் ஷேவ் லுக்கில் காட்சியளிக்கிறார் விஜய். நடிகர் விஜய்யின் கோட் படத்தின் ஷூட்டிங் முடியும் முன்னரே அப்படத்தின் டிஜிட்டல் உரிமை விற்றுப்போனதாக கூறப்படுகிறது. அதுவும் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் தொகை கொடுத்து கோட் படத்தின் ஓடிடி உரிமையை முன்னணி ஓடிடி தளம் வாங்கி இருக்கிறதாம்.

இதையும் படியுங்கள்... Vijay : புஸ்ஸி ஆனந்த் சகவாசம் விஜய்க்கு நல்லதல்ல... என் மகனோட எதிர்காலத்த நினைச்சா பயமா இருக்கு - SAC குமுறல்

இப்படி கோட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வர, அப்படத்தின் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அந்த வகையில் கோட் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் கேரளாவில் நடைபெற்றது. இதற்காக கேரளா சென்றிருந்த நடிகர் விஜய்க்கு அங்குள்ள ரசிகர்கள் அளித்த வரவேற்பை பார்த்து மலையாள திரையுலகமே ஷாக் ஆகிப்போனது. அங்குள்ள முன்னணி நடிகர்களுக்கே கிடைக்காத வரவேற்பு விஜய்க்கு கிடைத்திருந்தது.

MS Dhoni

கேரளாவில் உள்ள கிரீன் ஃபீல்டு என்கிற கிரிக்கெட் மைதானத்தில் தான் கோட் பட ஷூட்டிங் நடைபெற்றது. அப்போது கிரிக்கெட் சம்பந்தமான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு அப்படத்தில் இருந்து ஒரு ஹாட் அப்டேட்டும் வெளிவந்துள்ளது. அதன்படி, கோட் படத்தில் தல தோனியும் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. கிரிக்கெட் சம்பந்தமான காட்சியில் தோனியும், விஜய்யும் இணைந்து நடிக்க உள்ளதாகவும் படக்குழு இதனை சீக்ரெட்டாக வைத்திருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. அது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... தொகுப்பாளராக களம் இறங்கும் ரக்ஷன் - மணிமேகலை! அட கோமாளிகள் இவங்க தானா? 'குக் வித் கோமாளி' சீசன் 5 அப்டேட்!

click me!