போதும்டா சாமி ஆளவிடுங்க.... பிக்பாஸில் இருந்து அதிரடியாக விலக முடிவெடுத்த கமல்ஹாசன்? அப்போ அடுத்த host இவரா?

First Published Dec 11, 2023, 4:01 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் முடிந்ததும் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளர் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

kamalhaasan

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி மூலம் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக அவதாரம் எடுத்தார். இந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் என்றே சொல்லலாம். அவர் தொகுத்து வழங்கும் விதம் மற்றும் மக்களின் குரலாக போட்டியாளர்களிடம் பேசுவது, அவர்கள் தப்பு செய்தால் தட்டிக் கேட்பது என இவர் சிறந்த முறையில் தொகுத்து வழங்கியதால் அந்நிகழ்ச்சிக்கான மவுசும் நாளுக்கு நாள் அதிகரித்தது.

BiggBoss Kamalhaasan

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனை எட்டி உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முந்தைய சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசனில் ஒரு தொகுப்பாளராக கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார் கமல்ஹாசன். பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது முதல் கடந்த வாரம் நிக்சன் - நிவிஷா விவகாரத்தை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றது வரை கமல்ஹாசன் சந்தித்த சர்ச்சைகள் ஏராளம் உள்ளன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Bigg Boss Tamil season 7

இதனால் கமல்ஹாசனின் பெயரும் டேமேஜ் ஆகி வருகிறது. குறிப்பாக சோசியல் மீடியாவில் கமலை ஏராளமானோர் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த ஷோவிலேயே தப்பை தட்டிக்கேட்காத நீங்கள் அரசியலுக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியால் கமல்ஹாசனின் அரசியல் வாழ்க்கையும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கமல்ஹாசன் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

Kamal quits biggboss

அதன்படி இந்த சீசனுடன் பிக்பாஸில் இருந்து விலக கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸில் இருந்து விலகி அரசியலில் தன்னுடைய கவனத்தை செலுத்த அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அநேகமாக இதுவே கமல்ஹாசனின் கடைசி சீசனாக இருக்கும் என நம்பத்தகுந்த வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டால் அவருக்கு பதில் சிம்புவை களமிறக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... சௌந்தரபாண்டி செய்த சூழ்ச்சியால் சண்முகத்தை சந்தேகப்படும் பரணி - அண்ணா சீரியலில் செம்ம டுவிஸ்ட்

click me!