திருப்பூர் கணியம்பூண்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆகாஷ் குமார் (22). இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். நேற்று வழக்கம் போல பணி முடிந்து தனது அறைக்கு சென்று கொண்டிருந்தார்.
திருப்பூரில் வடமாநில தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் கணியம்பூண்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆகாஷ் குமார் (22). இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். நேற்று வழக்கம் போல பணி முடிந்து தனது அறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரை சுற்றிவளைத்து செல்போனை பிடுங்க முயன்றுள்ளனர். ஆகாஷ் குமார் செல்போனை தர மறுத்ததால் மூன்று பேரும் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி விட்டு செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை நண்பர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி ஆகாஷ் குமார் இன்று காலை உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த சக வட மாநில தொழிலாளர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.