Sonali Bendre Cancer: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காதலர் தினம் ஹீரோயின்...இப்போது அவரின் நிலை என்ன தெரியுமா..?

First Published May 26, 2022, 3:22 PM IST

Sonali Bendre Cancer: புற்றுநோய் தனக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்ததாக 90ஸ் பேவரைட் 'காதலர் தினம்' புகழ் சோனாலி பிந்த்ரே கூறியுள்ளார்.

Sonali-Bendre

பாலிவுட்டில்  பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். தமிழில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த 'காதலர் தினம்' சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இன்றும் 90ஸ் இளசுகளின் நெஞ்சை சிறகடித்து பறக்க வைக்கும். அந்த அளவிற்கு இளம் நெஞ்சங்களின் மனதை கொள்ளை கொண்டார். 

Sonali-Bendre

சினிமாவில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கும்போதே கடந்த 2002 ஆம் ஆண்டு தயாரிப்பாளரும் இயக்குநருமான கோல்டி பெஹல்லைஎன்பவரை திருமணம் குடும்பம் குழந்தை என செட்டில் ஆனார். திருமணத்துக்கு பிறகு, சினிமாவில் நடிப்பதை நிறுத்தி கொண்ட சோனாலி. அவ்வப்போது இந்தி தொலைக்காட்சிகளின் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக பங்கேற்பார். 
 

Sonali-Bendre

இதையடுத்து, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திடீரென ஒருநாள் சோனாலி பிந்த்ரே தான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் இதனால், அமெரிக்காவின் நியூயார்க் நகர் மருத்துவமனையில் சிகிச்சையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.  

Sonali-Bendre

இந்த நிலையில், தற்போது புற்றுநோய் தனக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்ததாக  90ஸ் பேவரைட் 'காதலர் தினம்' புகழ் சோனாலி பிந்த்ரே மனம் தளராது கூறியுள்ளார்.

Sonali-Bendre

ஆம் ''புற்றுநோய் சிகிச்சையின் போது எனக்கு செய்யப்பட்ட அறுவை சிகிக்சையால், உடலில் 23 அங்குல தழும்பு இருக்கிறது. சிகிச்சைக்கு பின் 24 மணி நேரத்தில் நடக்க வேண்டும் என் உறுதியாக இருந்தேன், கைப்பிடியை பிடித்து நடந்தேன். அந்த நாட்கள் மிகவும் கடினமானவை'' என உருக்கமாக 45 வயதாகும் சோனாலி பேசியுள்ளார்.

மேலும் படிக்க.....Suriya 41 Movie update: சூர்யா 41 படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதா...பாலாவுடன் ஏற்பட்ட மனகசப்பு தான் காரணமா..?

click me!