Amaran : விஜய் உடன் மோதுகிறாரா சிவகார்த்திகேயன்? அமரன் படத்தின் ரிலீஸ் தேதி அதிரடியாக மாற்றம் - காரணம் என்ன?

First Published Apr 30, 2024, 2:44 PM IST

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Amaran

கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. அப்படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை இயக்கிய இவருக்கு, அந்நிகழ்ச்சியில் பணியாற்றியதன் மூலம் கமல்ஹாசன் உடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் தன்னிடம் இருக்கும் கதைகளையும் கமலிடம் கூறிய ராஜ்குமார் பெரியசாமிக்கு ஒரு ஜாக்பாட் வாய்ப்பும் கிடைத்தது.

sivakarthikeyan amaran movie biopic of major mukund varadarajan

அதுதான் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் படம் இயக்கும் வாய்ப்பு. அந்த வகையில் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்துக்கு அமரன் என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த வரதராஜனின் பயோபிக் ஆக இப்படம் உருவாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Varalaxmi: வரலட்சுமியின் வருங்கால கணவரின் தோற்றத்தை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்! பளார் பதிலடி கொடுத்த நடிகை!

Amaran movie sivakarthikeyan

இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்த படக்குழு, எஞ்சியுள்ள காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகின்றனர். தற்போது அமரன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மே மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amaran Movie Release Date Changed

அமரன் திரைப்படத்தை ஆகஸ்ட் 15-ந் தேதி திரைக்கு கொண்டு வரும் ஐடியாவில் இருந்த படக்குழு, தற்போது அதில் இருந்து பின்வாங்கி உள்ளது. அதற்கு பதிலாக செப்டம்பர் மாதம் 27-ந் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அம்மாதம் தான் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படம் செப்டம்பர் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு திரைக்கு வர உள்ளது. அதனுடன் போட்டிபோட்டால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் அமரன் படக்குழு செப்டம்பர் 27-ந் தேதியை லாக் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... அரண்மனை 4-க்கு போட்டியாக ரீ-ரிலீஸ் ஆகும் அஜித் படங்கள்... இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் படங்களின் லிஸ்ட் இதோ

click me!