ஏலியன் ஸ்டோரி ஒர்க் அவுட் ஆகிடுச்சு.. ஷார்ப்பா ரெடியாகும் சிவாவின் அயலான் 2 - VFXக்கு மட்டும் 50 கோடியாம்!

First Published Jan 23, 2024, 4:57 PM IST

Sivakarthikeyan Ayalaan 2 : இந்த 2024ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான நான்கு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக அயலான் திரைப்படம் தனது இரண்டாவது வாரத்தில் பயணித்து வருகின்றது.

Ravikumar

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அவருடைய 14வது திரைப்படமாக உருவாக இருந்த திரைப்படம் தான் அயலான். "இன்று நேற்று நாளை" திரைப்பட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கிய அயலான் திரைப்படம் பல காரணங்களை முன்னிட்டு தொடர்ச்சியாக தள்ளிப்போனது. 

அரசியல் தலைவர்கள்.. இணைத்து கிசுகிசுக்கப்பட்ட 3 கோலிவுட் நாயகிகள் - டாப்பில் இருந்தும் நயனை துரத்திய Rumors!

Sivakarthikeyan

சுமார் ஏழு ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு கடந்த ஜனவரி 12ஆம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகின்றது. தமிழகத்தில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாயை கடந்து வசூல் சாதனை புரிந்து வருகிறது அயலான் திரைப்படம். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ரவிக்குமார் தயாராகி வருவதாகவும் இதற்கான ஒப்பந்தம் சிவகார்த்திகேயனுடன் கையெழுத்து ஆகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Ayalaan 2 on Cards

தற்பொழுது சிவகார்த்திகேயன், ராஜ்கமல் நிறுவனத்துடன் நடித்து வரும் திரைப்பட பணிகளை முடித்துவிட்டு, பிரபல இயக்குனர் முருகதாஸ் உடன் ஒரு திரைப்படத்தில் இணையவுள்ளார். அப்படப் பணிகளை முடித்த பிறகு அயலான் திரைப்படத்தின் இரண்டாம் பாகப் பணிகளை அவர் துவங்க அதிகமாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் தனியாக சுமார் 50 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்படும் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது.

Ajith Photo: ஸ்லிம் ஃபிட்! ஸ்டைலிஷ் லுக்... அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் ரீசென்ட் போட்டோவை வெளியிட்ட ஷாலினி!

click me!