Thug Life : கமலின் தக் லைஃப் படத்தில் இணையும் சிம்பு... அப்போ STR 48 படத்தோட நிலைமை?

First Published Mar 26, 2024, 10:53 AM IST

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து வரும் தக் லைஃப் படத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Simbu, Kamalhaasan

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், மணிரத்னத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் படம் தான் தக் லைஃப். இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் கம்ல்ஹாசன் ஹீரோவாக நடிக்க, அவருடன் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்க கமிட் ஆனது.

Dulquer salman, kamalhaasan

இதனிடையே நடிகர் கமல்ஹாசன் தற்போது நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் பிசியாக உள்ளதால் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய் உள்ளது. இதனால், அப்படத்தில் நடிக்க கமிட் ஆன நடிகர்கள் ஒவ்வொருவராக கழன்று வருகின்றனர். அதன்படி முதலில் துல்கர் சல்மான் வெளியேறிய நிலையில், அடுத்ததாக நடிகர் ஜெயம் ரவியும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அப்படத்தில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியானது.

இதையும் படியுங்கள்... Ajith : லவ் டுடே முதல் ஜீன்ஸ் வரை... என்னது இதெல்லாம் அஜித் நடிக்கவேண்டிய படமா? நல்ல சான்ஸை மிஸ் பண்ணிய AK

Thug Life

இந்த நிலையில், அவர்களுக்கு பதில் யார் நடிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வந்தது. அந்த வகையில் துல்கர் சல்மான் நடிக்க இருந்த வேடத்தில் அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு நடிக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாம். இதன்மூலம் நடிகர் கமல்ஹாசன் உடன் முதன்முறையாக இணைந்து பணியாற்ற உள்ளார் சிம்பு. அவர் இப்படத்தில் கமிட் ஆகியுள்ளதால் எஸ்.டி,ஆர் 48 படத்தின் நிலைமை என்ன என்பது தான் அடுத்த கேள்வியாக உள்ளது.

Simbu roped in for Thug Life

அதுகுறித்து வெளியான லேட்டஸ்ட் தகவலின் படி, எஸ்.டி.ஆர். 48 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முடிவடைய கூடுதல் நேரம் தேவைப்படுவதால் அதற்குள் தக் லைஃப் படத்தில் நடித்து முடிக்க சிம்பு திட்டமிட்டு உள்ளாராம். இதனால் தக் லைஃப் படத்தில் அவர் நடித்து முடித்த பின்னரே எஸ்.டி.ஆர் 48 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. எஸ்.டி,ஆர் 48 திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Lokesh Kanagaraj : கருங்காலி மாலை அணிவதற்கு காரணம் அந்த விபத்து தான்... லோகேஷ் கனகராஜ் சொன்ன ஷாக்கிங் தகவல்

click me!