65 வயது வரை ஐட்டம் டான்ஸ் ஆடி கோலிவுட்டை அதிரவிட்ட நடிகை! தமிழ் சினிமாவின் டாப் 10 ஐட்டம் டான்சர்ஸ் லிஸ்ட் இதோ

First Published Jan 17, 2024, 11:59 AM IST

ஜோதி லட்சுமி முதல் சில்க் ஸ்மிதா வரை ஐட்டம் டான்ஸ் ஆடி தமிழ் சினிமாவில் கிளாமர் குயின்களாக வலம் வந்த நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

‘ஐட்டம் சாங்’ கான்சப்ட் இந்திய சினிமாவில் ஒரு சக்சஸ் பார்முலாவாக பல வருடங்களாகவே இருந்து வருகிறது. முன்பெல்லாம் ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கெனவே பெயர்போன நடிகைகள் பலர் இருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் ஹீரோயின்களே கோதாவில் இறங்கி ஐட்டம் டான்ஸ் ஆடத்தொடங்கினர். கமர்ஷியல் படம் என்றாலே அதில் ஐட்டம் சாங் இருக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் அப்படம் போனி ஆகாது என்கிற நிலைமை தான் இன்றளவும் உள்ளது. சினிமாவில் கிளைமாக்ஸ் நெருங்கும் வேளையில் ஒரு ஐட்டம் சாங்கை வைத்து ரசிகர்களை பெப் ஏற்றும் பார்முலா இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. அப்படி கோலிவுட்டில் ஆடிய டாப் 10 ஐட்டம் டான்ஸ் நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டி.ஆர்.ராஜகுமாரி

1953-ல் வெளிவந்த தேவதாஸ் படத்தில் அறிமுகமான டி.ஆர்.ராஜகுமாரி தான் தமிழ் சினிமாவின் முதல் ஐட்டம் டான்சர். கோலிவுட்டில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை கட்டிப்போட்ட முதல் கனவுக்கன்னியும் இவர் தான். 

ஜோதி லட்சுமி

1963-ல் வெளிவந்த பெரிய இடத்து பெண் திரைப்படத்தின் மூலம் ஐட்டம் டான்சராக அறிமுகமானார் ஜோதிலட்சுமி. 65 வயது வரை ஐட்டம் டான்ஸ் ஆடிய ஒரே நடிகையும் இவர் தான். இவர் ரஜினியுடன் முத்து, விக்ரமின் சேது, கார்த்தி நடிப்பில் வெளிவந்த சிறுத்தை போன்ற படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறார்.

ஜெயமாலினி

1975-ல் வெளிவந்த டாக்டர் சிவா திரைப்படத்தின் மூலம் ஐட்டம் டான்சராக அறிமுகமானவர் ஜெயமாலினி, இவர் நடிகை ஜோதிலட்சுமியின் சகோதரி ஆவார். 1978-ல் ரிலீஸ் ஆன ஜெகன்மோகினி திரைப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்த பின்னர் இவருக்கு அடுத்தடுத்து கிளாமர் ரோல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அனுராதா

1979-ல் ரிலீஸ் ஆன காளி கோவில் கபாலி திரைப்படத்தில் ஐட்டம் டான்சராக காலடி எடுத்து வைத்தவர் அனுராதா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட ஆறு வெவ்வேறு மொழி படங்களிலும் ஐட்டம் டான்ஸ் ஆடி கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார்.

சில்க் ஸ்மிதா

கோலிவுட்டில் மறக்க முடியாத ஐட்டம் டான்சர் என்றால் அது சில்க் ஸ்மிதா தான். 1980-ம் ஆண்டு ரிலீஸ் ஆன வண்டிச்சக்கரம் படம் மூலம் அறிமுகமான இவர், 1990 வரை கோலிவுட்டில் கனவுக்கன்னியாக இருந்தார். இவரின் ஐட்டம் டான்ஸ் இருந்தால் படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்கிற அளவுக்கு லக்கி நாயகியாக வலம் வந்தார் சில்க்.

டிஸ்கோ சாந்தி

1983-ல் வெளிவந்த வசந்தமே வருக திரைப்படத்தின் மூலம் ஐட்டம் டான்சராக அறிமுகமானவர் டிஸ்கோ சாந்தி. இவரும் கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் கவர்ச்சி நடனம் ஆடி சில்க் ஸ்மிதாவை போல் கொடிகட்டிப்பறந்தார்.

மும்தாஜ்

1999-ல் வெளிவந்த மோனிஷா என் மோனாலிசா படம் மூலம் அறிமுகமான மும்தாஜ், சுமார் 19 ஆண்டுகள் தன்னுடைய கவர்ச்சி நடனத்தால் கோலிவுட்டையே கட்டிப்போட்டு வைத்திருந்தார். இதையடுத்து சினிமாவில் இருந்து விலகிய மும்தாஜ், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

முமைத் கான்

2001-ல் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த மஜ்னு படத்தின் மூலம் அறிமுகமானவர் முமைத் கான். இவர் விஜய்யுடன் போக்கிரி, வில்லு போன்ற படங்களில் ஆடிய ஐட்டம் டான்ஸ் செம்ம வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி தெலுங்கிலும் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார் முமைத் கான்.

கிரண்

கோலிவுட்டில் மிகவும் பாபுலர் ஆன ஐட்டம் டான்சர்களில் நடிகை கிரணும் ஒருவர். இவர் 2000 முதல் 2015 வரை பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், ஐட்டம் டான்ஸ் ஆடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார். இதுவே அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத் தந்தது.

நமீதா

தமிழ் திரையுலகில் தன்னுடைய கவர்ச்சியால் குறுகிய காலத்தில் பேமஸ் ஆனவர் நமீதா. இவர் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் ஆடிய உச்சக்கட்ட கவர்ச்சி நடனம் பரபரப்பாக பேசப்பட்டதோடு, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளையும் பெற்றுத்தந்தது.

இதையும் படியுங்கள்... பொங்கல் ரேஸில் வெற்றி... அயலான் டீம் உடன் கோவை பட்டீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்

click me!