ஜெயம் ரவி - துல்கர் சல்மானை தொடர்ந்து மணிரத்னத்தின் 'தக் லைஃப்' படத்தில் இருந்து விலகிய முன்னணி நடிகர்?

First Published Apr 13, 2024, 9:38 PM IST

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு துவங்க தாமதமாகிக்கொண்டே செல்வதால், இப்படத்தில் இருந்து மேலும் ஒரு முன்னணி நடிகர் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Thug Life

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் காம்போவில் பல வருடங்களு பின்னர் உருவாகிறது 'தக் லைஃப்' திரைப்படம், இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் முன்னரே... இப்படத்தில் இருந்து வெளியான டீசரில் கமலின் தோற்றம் பல படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியது.
 

Maniratnam

மல்டி ஸ்டார் படமாக உருவாக உள்ள இந்த படத்தில், ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் 'ஓகே கண்மணி' படத்தில் நடித்த துல்கர் சல்மான் மற்றும் 'பொன்னியின் செல்வன்' பட ஹீரோ ஜெயம் ரவி ஆகியோர் நடிக்க கமிட் ஆன நிலையில், படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே சென்றதால்... இருவருமே தங்களின் கால்ஷீட் வீணடிக்கப்பட்டதாக கூறி வெளியேறினர்.

வெங்கடேஷ் பட் பற்றி போட்ட ஒற்றை பதிவு! சர்ச்சையில் சிக்கிய குரேஷி 'குக் வித் கோமாளி'யை விட்டு வெளியேறுகிறாரா?
 

Thug Life movie Shoot Begins

இவர்களை தொடர்ந்து மற்றொரு முன்னணி ஹீரோ... 'தக் லைஃப்' படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் யாரும் அல்ல இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர், இயக்குனர் ஷங்கர் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்ட சித்தார்த் தான். ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் துல்கர் - ஜெயம் ரவிக்கு பதில், மணிரத்னம் சிம்பு மற்றும் அரவிந்த் சாமியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தேர்தலுக்கு பின்னரே துவங்கும் என கூறப்படுகிறது. சித்தார்த்துக்கு பதில் யார் இப்படத்தில் நடிப்பார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஸ்ரீதேவி முதல்... அமலா பால் வரை! திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான முன்னணி தமிழ் நடிகைகள் இத்தனை பேரா?
 

click me!