ஆரம்பித்த வேகத்தில் முடிவுக்கு வரும் ஜீ தமிழ் சீரியல்... மீண்டும் அதிரடியாக டைம் மாறும் பேவரைட் சீரியல்கள்

First Published May 2, 2024, 3:02 PM IST

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதால், சில சீரியல்களின் நேரம் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது. அதன் முழு விவரம் இதோ.

Zee Tamil Serial

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தொடர்ந்து நல்ல ரேட்டிங்குகளை பெற்று வருகிறது, இப்படியான நிலையில் மக்களின் மனம் கவர்ந்த சீதா ராமன் சீரியல் மொத்தமாக முடிவுக்கு வர இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Seetha Raman Serial

வெகுவிரைவில் இந்த சீரியலின் கிளைமாக்ஸை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன, இந்த சீரியல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இதில் பிரியங்கா நல்காரி ஹீரோயினாக நடித்து வந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதில் ஸ்ரீ பிரியங்கா சீதா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதேபோல் ரேஷ்மா பசுபுலேட்டி மகாலட்சுமி, நேன்சி என இரட்டை வேடங்களில் நடித்து வந்தார்.

இதையும் படியுங்கள்... முன்னாள் முதல்வரின் பேரனோடு நின்று போன திருமணம்.! வயசாகிடுச்சு என்று கரு முட்டையை சேமிக்கும் தனுஷ் பட நாயகி!

Maari Serial

இந்த சீரியல் ஆரம்பமாகி ஓராண்டு மட்டுமே ஆகும் நிலையில் தற்போது அதற்கு எண்ட் கார்டு போட்டுள்ளனர். அந்த சீரியலில் கிளைமாக்ஸ் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. சீதா ராமன் சீரியல் முடிவுக்கு வருவதால் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மற்ற சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றங்கள் நடைபெற இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

Meenakshi Ponnunga Serial

ஆமாம், தற்போது 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாகவும் 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியல் இனி 7.30 மணி வரை என ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Jyothika : ஒரு சில சீன் பார்த்ததுக்கே இப்படியா? - கங்குவா படம் குறித்து ஜோதிகா சொன்ன முதல் விமர்சனம் இதோ

click me!